Header Ads



கனடாவில் 4 முஸ்லிம்கள் தீவிரவாதியினால் படுகொலை - இஸ்லாமோபோபியாவிற்கு இடமில்லை என்கிறார் பிரதமர்

- ஸகி ஜுனைத் -

கனடா ஒன்றாரியோ லன்டன் நகரில் வாகனத்தினால் மோதி முஸ்லிம்களை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி மேலும் அறிய வருவதாவது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 8.40 மணியளவில் இலங்கை நேரப்படி திங்கள் கிழமை காலை 6.10 அளவில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த, ஒரு முஸ்லிம் குடும்பத்தின் மீது 20 வயதேயான ஒரு பயங்கரவாதி வேண்டுமென்றே தனது பிக்கப் ரக வாகனத்தினால் மோதி நால்வரை கொலை செய்துள்ளான், அத்துடன் 9 வயது பிள்ளை அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்காக போராடுவதக செய்திகள் தெரிவிக்கின்றன.

செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் இஸ்லாமோபோபியாவிற்கு கனடாவில் இடம் இல்லை. முஸ்லிம்களுடன் தாம் நிற்பதாகவும் கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. யாஅல்லாஹ் ஷஹீதான இந்த குடும்பத்துக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுவனத்தை அருளுவாயாக. காயப்பட்ட பிள்ளையை குணமாக்கி அவர்களுக்கு மிகச்சிறந்த துணையை அருளுவாயாக. இதுபோன்ற நிகழ்ச்சிகள் அந்த நாடுகளில் தொடராமல் அவர்களைக் காப்பாற்றுவாயாக. ஆமீன்.

    ReplyDelete
  2. யாஅல்லாஹ் ஷஹீதான இந்த குடும்பத்துக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுவனத்தை அருளுவாயாக. காயப்பட்ட பிள்ளையை குணமாக்கி அவர்களுக்கு மிகச்சிறந்த துணையை அருளுவாயாக. இதுபோன்ற நிகழ்ச்சிகள் அந்த நாடுகளில் தொடராமல் அவர்களைக் காப்பாற்றுவாயாக. ஆமீன்.

    ReplyDelete
  3. அடையாளங்களை பார்த்து கொலைசெய்கிற காட்டுமிராண்டி தனம் மனுக்குலத்துக்கே விரோதமானதாகும்.இத்தகைய கொடுமைக்கு சம காலத்தில் முஸ்லிம்களும் யூதர்களும் அதிகம் பாதிக்கபடுகின்றனர். இந்த போக்க்கை வளரவிடாமல் நசித்து அழிப்பது அவசியமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.