Header Ads



வட மாகாண கடலில் 40 பஸ்கள் இறக்கப்படுகிறது - இனவிருத்தி பெருகுமென நம்பிக்கை (படங்கள்)


வடக்கு கடலில் கடலுணவுகளின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்காக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலின் அடிப்படையில், இன்று -11- வடக்குக் கடலில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதாவது, கடலுணவுகளின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு, குறித்த பிரதேசத்தில், பாவனைக்கு பயனற்று கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளை இறக்கி விடுவதன் மூலம் மீன் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் திணைக்களத்தினால் வடக்கு கடலில் மேற்கொள்ளப்படும் குறித்த செயற்திட்டத்தின் முதற் கட்டத்தில் சுமார் 40 பேரூந்துகளை கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், முதலாவது தொகுதி பேரூந்துகளை ஏற்றிய சாயுரு எனும் கடற்படைக் கப்பல், அடையாளப்படுத்தப்பட்ட கடல் பகுதியை நோக்கிய தனது பயணத்தினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

-யாழ். நிருபர் பிரதீபன்-



2 comments:

  1. Undersea sheltering for fish smugglers can hide their goods as well

    ReplyDelete
  2. நம் கடலில் மீன்கள் வாழ்விடத்தை அகட்டி மீன்வளத்தை மேம்படுத்தும் நல் முயற்ச்சி. மேலும் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைக் கொண்டு கடல் மடியை பாழாக்கும் நாசகாரிகளுக்கும் எச்சரிக்கையாக இருக்கும். கடற்தொழில் அமைச்சுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.