Header Ads



இந்தியாவில் 3 முஸ்லிம்கள் அடித்துக் கொலை


திரிபுரா மாநிலத்தில் உள்ள கொவாய் மாவட்டத்தில் கால்நடைகளை திருடியதாகக் கூறி மூன்று பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கொவாய் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கிரண் குமார் பிடிஐ முகமையிடம் விளக்கமளித்திருக்கிறார்.

"இன்று (20 ஜூன் 2021 ஞாயிற்றுக்கிழமை) காலை சுமார் 4.30 மணிக்கு, ஒரு சிறிய வேன் வாகனத்தில், ஐந்து கால்நடைகளோடு மூன்று பேர் அகர்தலா நோக்கிச் செல்வதை திரிபுரா மாநிலத்தில் இருக்கும் நமன்ஜாய்புரா கிராம மக்கள் கண்டார்கள்" என காவல் துறை கண்காணிப்பாளர் கிரண் குமார் கூறினார்.

"கிராமத்தினர் கால்நடைகளை கடத்தப்பட்டு கொண்டு செல்வதாக எண்ணி அவ்வாகனத்தை வடக்கு மகாராணிபூர் கிராமத்தில் வைத்து மடக்கியுள்ளனர்.

அவ்வாகனத்தில் இருந்த மூவரையும் கிராமத்தினர் பயங்கர ஆயுதங்களால் அடித்து நொறுக்கியுள்ளனர். கிராமத்தினரின் தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். ஒருவர் மட்டும் எப்படியோ சமாளித்து தப்பி ஓடியுள்ளார்.

தப்பி ஓடியவரும், மகாராணிபூர் கிராமத்துக்கு அருகில் உள்ள முங்கியாகாமி என்கிற குக்கிராமத்தில் சிக்கினார். அந்த நபரையும் கிராமத்தினர் கொன்றுவிட்டனர்" என காவல் துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

"சம்பவம் நடந்த இடத்துக்கு காவல் துறையினர் சென்று, மூவரையும் அகர்தலா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்பே இறந்துவிட்டார்கள் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்" என காவல் துறை கண்காணிப்பாளர் கிரண் குமார் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருவதாக கூறியுள்ளார் அவர். ஆனால் இதுவரை யாரும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்படவில்லை என்பதையும் காவல் துறை கூறியுள்ளது.

கொல்லப்பட்டவர்கள் ஜயீத் ஹுசைன் (வயது 30), பிலால் மியா (வயது 28), சைஃபுல் இஸ்லாம் (வயது 18) என அடையளம் காணப்பட்டு இருக்கிறது இவர்கள் மூவரும் செபாஹிஜாலா மாவட்டத்தில் சொனாமுரா என்கிற நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஆசியாவின் கேவலமான இந்தியா துண்டு துண்டாக சிதறும் நாள் வெகு தொலைவிலில்லை. சீனாவின் இராணுவ நிலைகள் இலங்கை வடக்கில் அமைவது காலத்தின் கட்டாயம்.அவை அணுகுண்டு வீசும் வசதியை கொண்டிருக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.