Header Ads



அமெரிக்காவின் அடாவடி - ஈரான், காசா ஆதரவு உள்ளிட்ட 36 வலைத்தளங்களை கைபற்றியது


தவறான தகவல்கள் பகிர்வினை மேற்கொள்காட்டி அமெரிக்க நீதி மற்றும் வர்த்தகத்துறை சுமார் 30 க்கும் மேற்பட்ட ஈரானிய அடிப்படையிலான வலைத்தளங்களை செவ்வாயன்று கைப்பற்றியுள்ளது.

கைப்பற்றப்பட்ட சுமார் 36 வலைத்தளங்களில் இரண்டு ஈரானிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள செய்தி நிறுவனங்களான பிரஸ் தொலைக்காட்சி மற்றும் அல்-ஆலம் ஆகியவையும் அடங்கும்.

தளங்களைப் பார்வையிடுவது செவ்வாயன்று ஒரு அமெரிக்க அரசாங்க எச்சரிக்கையை உருவாக்கியது.

 அமெரிக்க தொழில்துறை மற்றும் பாதுகாப்பு பணியகம், ஏற்றுமதி அமலாக்க அலுவலகம் மற்றும் எப்.பீ.ஐ. ஆகியவற்றால் “சட்ட அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக” வலைத்தளங்கள் கைப்பற்றப்பட்டதாக இது தொடர்பில் வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

காசாவை தளமாகக் கொண்ட ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்களின் பார்வைகளை பிரதிபலிக்கும் பாலஸ்தீன் டுடே என்ற செய்தி வலைத்தளத்தின் டொமைன் பெயரையும் அமெரிக்க அரசாங்கம் எடுத்துக் கொண்டது.

ஈரானின் கடுமையான நீதித்துறைத் தலைவரான இப்ராஹிம் ரைசியின் தேர்தல் வெற்றியின் சில நாட்களுக்கு பின்னர் இந்த நடவடிக்கை வந்துள்ளது. (வீரகேசரி)

No comments

Powered by Blogger.