Header Ads



3 நாள்களுக்கும் அதிகமாக காய்ச்சலா..? உடனடியாக பிள்ளைகளை வைத்தியர்களிடம் அழைத்துச் செல்லுங்கள் - Dr தீபால்


மூன்று நாள்களுக்கும் அதிகமாக காய்ச்சல் காணப்படுமாக இருந்தால், உடனடியாக பிள்ளைகளை வைத்தியர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டுமென லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்  தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

டெங்குக் காய்ச்சல், கொரோனா வைரஸ் தொற்று ஆகிய இரண்டுக்கும் காய்ச்சலே பொதுவான அறிகுறியெனத் தெரிவிக்கும் அவர்,  நாட்டில் ஏற்பட்டிருக்கும் மோசமானக் காலநிலையால் குழந்தைகளுக்கு டெங்குக் காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதோடு, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகும் நிலைமையும் காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளார்.

இதனால் காய்ச்சல் ஏற்படும் குழந்தைகளை உடனடியாக வைத்தியரிடம் அழைத்துச் சென்றுப் பரிசோதிப்பது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.