Header Ads



இலங்கை 2 பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது - சர்வதேசம் உடனடியாக உதவவேண்டும் - ஐ.நா.


எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்  மூழ்கிக்கொண்டிருப்பதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கண்காணிப்பதற்கும், கரையோர சமூகங்களிற்கும் கடல்வாழ் உயிரினங்களிற்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கணிப்பிடுவதற்கும், உலக நாடுகள் இலங்கைக்கு உதவவேண்டும் என இலங்கைக்கான ஐக்கியநாடுகள் வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடரும் பெருந்தொற்றையும் தனது கரைகளில் உருவாககூடிய கடல்சார் பேரழிவையும் எதிர்நோக்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின்  பலம் மற்றும் மீளஎழுச்சி பெறும் திறன் ஆகியவற்றை எதிர்பார்க்கும் அதேவேளை உலகில் உள்ள இலங்கையின் சகாக்களை உடனடி உதவிகளை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட உபகரணங்கள்  முதல் (தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள்,ஏற்படக்கூடிய எண்ணெய் கசிவினை கையாள்வதற்கான சாதனங்கள் மற்றும்  சுத்திரிகரிப்பதற்கான பொருட்கள்,) பாதிப்புகளை கண்காணிப்பதற்கும் கரையோர சமூகங்களிற்கும் கடல்வாழ் உயிரினங்களிற்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கணிப்பிடுவதற்கும் உலக நாடுகள் உடனடி உதவிகளை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் சூழலை பாதுகாப்பது இந்த சவாலை எதிர்கொள்ள உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Hanaa Singer-Hamdy

SriLanka faces both the ongoing pandemic and a looming marine disaster on its shores. I look to the strength and resilience of Sri Lankans and call upon their partners around the world to extend immediate support – from specialized equipment (for example personal protective equipment, cleaning gear and equipment to tackle a potential oil spill), to monitoring and gauging impacts on coastal communities and marine life. 

Safeguarding our environment will help us overcome these challenges and have a safer, healthier planet.

1 comment:

  1. அநியாயக்கார ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்திய மக்களின் மீது விழுந்த சாபங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.