Header Ads



கொரோனா தொடர்பான வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றினால் 21ம் திகதி போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்கலாம்


கொரோனாவைரஸ் தொடர்பான வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றினால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடையும் என தெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர் இதன் மூலம் திங்கட்கிழiமை போக்குவரத்து கட்டுப்பாடுகளை நீக்ககூடிய சூழல் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 21 ம் திகதி போக்குவரத்து தடைகளை நீக்குவது என்றே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் உட்பட விதிமுறைகளை மக்கள் இறுக்கமாக பின்பற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக அதிகளவு வாகனங்களை வீதிகளில் அவதானிக்க முடிகின்றது என தெரிவித்துள்ள பொலிஸ்பேச்சாளர் உரிய ஆவணங்கள் காரணங்கள் இன்றி பயணிக்கும் வாகனசாரதிகளை கைதுசெய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியமைக்காக செவ்வாய்கிழமை 1411பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் ஒரே நாளில் அதிகளவானவர்கள் கைதுசெய்யப்பட்டமை நேற்றே என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார். Thinakkural

1 comment:

  1. How come this announcement is being made by the Police spokesperson instead of the Army Commander who usually makes this type of Announcement?

    Is it because his last announcement on the extension of the "lockdown" from the 14th June, was changed within hours on the same day?

    ReplyDelete

Powered by Blogger.