Header Ads



ரணிலுடன் இணைவாரா விமல்..? 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தவும் இணக்கமா..?? - அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு


(தினக்குரல்) 

அரசாங்கம் குறித்து அதிருப்தியடைந்துள்ள அமைச்சர் விமல்வீரவன்சவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகிள்ளன.

மூன்றாம் தரப்பொன்றின் முயற்சிகள் காரணமாக இருவருக்கும் இடையில் இணக்கப்பாடொன்று ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல பௌத்தமதகுரு ஒருவர் இருவருக்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் உருவாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் பொதுவேட்பாளராக விமல்வீரவன்சவை நியமிப்பதற்கு ரணில்விக்கிரமசிங்க சம்மதித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமல் வீரவன்ச தரப்பினர் தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிக்கவேண்டும் சரியான தருணம் வரும்போது மைத்திரிபால சிறிசேன போன்று அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமல்வீரவன்ச பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளில் கண்வைத்துள்ளார் என்பது வெளிப்படையான உண்மை, ஆனால் அதற்கான வேறு தந்திரோபாயங்களை வழிமுறைகளை பின்பற்றுவது என குறிப்பிட்ட பௌத்தமதகுரு உட்பட இந்த திட்டத்தை முன்னெடுப்பவர்கள் தீர்மானித்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமல்வீரவன்ச கட்சியில் தற்போது காணப்படும் நிலையிலிருந்து மேலும் வளருவதற்கு அனுமதிக்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டால், என்ன செய்வது என்பது அடிப்படையாக வைத்தே அவர்கள் வேறு வழிமுறைகள் குறித்து சிந்தித்துள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கு செல்வதில்லை என உறுதியான தீர்மானத்துடன் காணப்பட்ட முன்னாள் பிரதமர் அந்த முடிவை மாற்றியுள்ளமை தற்செயலான விடயமில்லை –எதிர்காலத்தில் எதிர்பார்க்காத பல அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Like

2 comments:

  1. So this news will not reach to the Mottu???? Hihihihi...
    Also, Double passport holder is our land Leaders? OMG!!!!!

    ReplyDelete
  2. விமலை பிரதமராக்க அல்லது சனாதிபதியாக்கும் அளவுக்கு இந்த நாட்டு மக்கள் நான்கு கால் படைப்புகளாக மாறிவிட்டார்களா என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.