Header Ads



செய்யாத ஒரு கொலைக்காக 2 ஆயுள் தண்டனையை பெற்று 18 ஆண்டுகளுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையானவர் இன்று வபாத்தானார்


1997ல் திண்டுக்கல்லில் நடந்த ஒரு கொலை வழக்கு. இறந்து போனவர் இந்துத்துவா இயக்கத்தை சேர்ந்தவர் என்பதால் ஊரே பதற்றத்தில் இருந்தது. 

இறந்து போனவரின் கடையில் சிறுவயது முதல் மீரான் மொய்தீன் என்ற ஒரு முஸ்லீம் இளைஞர் வேலை செய்து வருவதாக போலீசுக்கு ஒரு தகவல் கிடைத்தது. 

போலீஸ் ரொம்ப யோசிக்க வெல்லாம்  இல்ல, அந்த இளைஞரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தார்கள்..

சின்ன வயசில் இருந்து விசுவாசமாக வேலை செய்து வந்த முதலாளியையே கொலை செய்த பழியோடு சிறைக்குள் அடைக்கப்பட்டார் அந்த அப்பாவி இளைஞர். 

சிறைக்கு சென்ற பின்பு வழக்கை நடத்த வக்கீல் வைக்கக்கூட வக்கில்லாமல், இரட்டை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டது. 

நீண்டகால சிறை வாழ்க்கையில், சரியான சிகிச்சை எடுக்க முடியாமல்  இரண்டு சிறுநீரகமும் பழுதாகி உயிருக்குப் போராடி வந்தார்.

2018ல் 10 ஆண்டு கழித்த சுமார் 1460 ஆயுள் சிறைவாசிகளை அதிமுக அரசு விடுதலை செய்தபோது கூட இவரைப் போன்ற முஸ்லீம் சிறைவாசிகளை விட மறுத்து விட்டது.  கடைசியில் அவர் மனைவி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்த பிறகு ஐகோர்ட் இவரை மெடிக்கல் கிரவுன்டில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. 

செய்யாத ஒரு கொலைக்காக சுமார் 18 ஆண்டுகளுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையானார்.

டயாலிசிஸ் மூலம் உயிர்வாழ்ந்து வந்தவர், இன்று 09.06.2021 டயாலிசிஸ் செய்யும் போது உயிர் பிரிந்தது விட்டது. இவரைப் போன்ற பல அப்பாவிகள் 23 ஆண்டுகள் கடந்தும் இன்னும் சிறையில் உண்டு..

- Mohamed Bashith -

No comments

Powered by Blogger.