Header Ads



விக்டோரியா நீர்த்தேக்கத்தினுள் வீழ்ந்து லொறி - சாரதியுடன் சேர்த்து 1,600 கோழிகளும் உயிரிழப்பு


1,600 கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி மஹியங்கனை - கண்டி பிரதான வீதியில் மொரகஹமுல, கல்ஓய பாலத்துக்கு அருகில் விக்டோரியா நீர்த்தேக்கத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லொறி  சாரதி பலியானதுடன், அதில் ஏற்றிச்செல்லப்பட்ட 1,600 கோழிகளும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிபிலை பிரதேசத்திலிருந்து கண்டி, கம்பளை பிரதேசத்தை நோக்கி பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த சாரதி, கட்டுகிதுல, மீகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த அஷேன் தனுஷ்க என்பவரே உயிரிழந்தவராவார்.

இந்த லொறி கல்ஓய பாலத்துக்கு அருகில் இருந்த தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு நீர்த்தேக்கத்துக்குள் வீழ்ந்துள்ளதாகவும், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.