Header Ads



1,486 வகையான பொருள்களுடன் மூழ்கும் கப்பல்


கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில், தீப்பற்றி எரிந்த எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கிக்கொண்டிருக்கின்ற நிலையில், அக்கப்பல் ஏற்றிவந்த அபாயகரமான இராசயனங்களின் பட்டியலை சுற்றுச்சூழல் நீதிக்கான மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.

இந்த கப்பலின் கண்டெய்னர் ஒன்றில் அபாயகரமான இரசாயனங்கள் இருந்ததோடு, ஏனையக் கண்டெய்னர்களின் அழகு சாதனப் பொருள்கள், அலுமினியத் தயாரிப்புப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் காணப்பட்டதாக மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுக்கொண்ட தகவல்களை பொதுமக்களின் நன்மைக் கருதியும், நீர்கொழும்பு உள்ளிட்ட கடற்கரையில் கரையொதுங்கும் இக்கப்பலின் இராசாயனப் பொருள்களை பொதுமக்கள் எடுத்துச் செல்வதைத் தடுக்கும் வகையிலுமே இத்தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இக்கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வது தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நேற்று முன்தினம் (01) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

அதனடிப்படையில், 1,486 வகையான பொருள்கள் அடங்கிய கொள்கலன்களுடன் அக்கப்பல், மூழ்கடிக்கப்பட்டுகொண்டிருக்கிறது. 

அனர்த்தத்துக்கு உள்ளான இக்கப்பல் மூழ்கும் அபாயம் இருப்பதாக கடல் சார் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதோடு, அப்படி நிகழ்ந்தால், கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை குறைக்க கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கை எனவும் முன்மொழியப்பட்டது.

அதன்படி, தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல உடனடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், இந்த விடயத்தில் எடுக்கப்படும் தீர்மானம், தொழில்நுட்ப விடயங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அரசியல் விடயங்களை அதனுடன் சம்பந்தப்படுத்தக்கூடாது என்றும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

2 comments:

  1. Your Excellency President Gotabaya Rajapaksa,
    PLEASE KINDLY TAKE STERN ACTION ON THIS DISASTER AND FIND OUT THE TRUTH BEHIND THIS GREAT DISASTER THAT HAS PUT OUR "MAATHRUBOOMIYA" IN GREAT PERIL, EXCELLENCY SIR.
    YOU ARE THE ONLY LEADER IN THE HISTORY OF SRI LANKA WHO CAN PUT AN END TO THE MISERY OF CORRUPTION THAT OUR "MAATHRUBOOMIYA" HAS BEEN SUBJECTED TO BY UNSCRUPULOUS POLITICIANS, GOVERNMENT OFFICIALS, BUSINESS MAGNATES AND OTHERS. YOU DID WIN THE RUTHLESS WAR AGAINST THE LTTE IN 2009, YOU CAN WIN THIS WAR AGAINST CORRUPTION TOO, YOUR EXCELLENCY SIR.

    இது ஒரு தவறின் விளைவாக நடக்காது. ஊழல் காரணமாக மட்டுமே இது நிகழும். இந்த அதிகாரிகள் உருவாக்கிய "மோசமான கடல் சுற்றுச்சூழல் பேரழிவுகள்,
    மற்றும் எங்கள் மக்கள் எதிர்கொள்ளும் பேரழிவுகளை
    பாருங்கள்.
    இந்த MV X-Press Pearl கப்பலை கொழும்பு ஹபூருடன் நெருங்க அனுமதித்த துறைமுக அதிகார சபை ஊழியர்கள், சரியான நடவடிக்கை எடுக்காமல் "ஸ்மோக்" ஐப் பார்க்கும்போது / கவனித்தபோது, கப்பல் எப்படி துறைமுகத்திற்கு அருகில் வர அனுமதித்தார்கள்? இந்த பெரிய பேரழிவுக்கு அவர்கள் முற்றிலும் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் இப்போது ஜனாதிபதியை ஏமாற்றுவதன் மூலம் உண்மையை மறைக்க முயற்சிக்கின்றனர். இது இந்த அரசாங்க ஊழியர்களுக்கு உதவுவதும் அரசியல்வாதிகளின் செயலாக இருக்கலாம்?
    சக்திவாய்ந்த கூறுகளாகும்
    இருக்கலாம்?அவர்களுடன் கப்பல் முகவர் அதை மறைக்க அல்லது "கம்பளத்தின்" கீழ் துடைக்க முயற்சிக்கிறார்.தேசத்தை காப்பாற்ற அரசாங்கம் இந்த விஷயத்தில் வலுவான முடிவுகளை எடுக்க வேண்டும்.
    இந்த விஷயத்தில் உண்மையில் என்ன என்ன நடந்தது என்பது குறித்து ஆழமாக ஆராய வேண்டும். தேசத்தை காப்பாற்ற அரசாங்கம் இந்த விஷயத்தில் வலுவான முடிவுகளை எடுக்க வேண்டும். "CORRUPT" அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட லாபங்களுக்காக சில மில்லியன் டாலர்கள் நலனுக்கான பன்னாட்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக இதுபோன்ற பேரழிவிலிருந்து எங்கள் ஜனாதிபதி நம் நாட்டை,"MAATHRUBOOMIYAவை" காப்பாற்ற வேண்டும். Noor Nizam - Peace and Political Activist, Political Communications Researcher, SLFP/SLPP Stalwart, Convener "The Muslim Voice" and Member "Viyathmaga".

    ReplyDelete
  2. Noor Nizam, சுற்றிவலைத்து, கடைசியில் ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழளால் தான் கப்பல் எரிந்தது என்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.