Header Ads



இந்த நாட்டில் திறமையாக விளையாடக்கூடிய 11 பேரை கண்டுபிடிக்க முடியவில்லையா..?


இந்த நாட்டின் இரண்டு கோடி மக்களும் விரும்பும் கிரிக்கெட் விளையாட்டை உங்களால் மீளவும் கட்டியெழுப்ப முடியாதா? ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சை மாத்திரமல்ல அரசாங்கத்தையும் வேறு நபர்களிடம் கையளித்துவிட்டு செல்லுங்கள் என ராஜாங்கனே சத்தா ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இன்று இலங்கைக்காக விளையாடும் வீரர்களுக்கு நாடு குறித்து, விளையாட்டு குறித்து, மதம் குறித்து, எவ்வித அக்கறையும் இல்லை. அவர்களுக்கும் பணமே வேண்டும். கிரிக்கெட் நிர்வாகத்தில் வர்த்தகர்களே இருக்கின்றனர். பணத்தின் மீதான பேராசையில் அவர்கள் பதவி வகிக்கின்றனர்.

திலங்க சுமத்திபால ஒரு சூதாட்டக்காரர். அவரை நீக்குங்கள். நாட்டின் விளையாட்டை மீட்டெடுக்க முன்னாள் விளையாட்டு வீரர்களை நியமியுங்கள்.

உங்களால் முடியாவிடின் ஒப்படைத்துவிட்டு வீட்டுக்கு செல்லுங்கள். சிம்பாவ்பே அணியில் இருந்து பயிற்றுவிப்பாளரை கொண்டுவந்துள்ளீர்கள். நாங்கள் அந்த நாட்டை கணக்கில்கூட எடுத்ததில்லை. இந்த நாட்டில் அவர்களைவிட திறமையானவர்கள் இல்லையா? நீங்கள் திருடர்களுக்கு வாய்யப்பளித்துள்ளீர்கள்.

இந்த நாட்டில் திறமையாக விளையாடக்கூடிய 11 பேரை கண்டுபிடிக்க முடியவில்லையா? கிரிக்கெட்டில் அரசியல் கலந்துள்ளதால், குறிப்பிட்ட பிரதேசத்திற்கு மாத்திரம் விளையாட்டு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், இன்று நாசமாகியுள்ளது.

முடியாவிடின் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு செல்லுங்கள். கிரிக்கெட் என்பது இந்த நாட்டின் உயிர்மூச்சு. இன்று அழிந்துபோயுள்ளது. முழுமையாக அரசியல் மயப்பட்டுள்ளது.

திறமைக்கு வாய்ப்பளிப்பளிக்கப்படுவதில்லை. உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த அர்ஜுன ரணதுங்கவிடம் இதனை ஒப்படையுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. உண்மை கிரிக்கெட்டில் அரசியல் விளையாடுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.