Header Ads



கிராம உத்தியோகத்தரை தாக்கிய SLPP உக்குவளை பிரதேச உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கம்


கிராம உத்தியோகத்தரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உக்குவளை பிரதேச சபை உறுப்பினரான எரந்திகா குமாரி கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி உக்குவளை பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்கும் போது இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதற்கிணங்க, மறு அறிவித்தல் வரை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி எவ்வித நடவடிக்கைகளிலும் எரந்திகா குமாரி ஈடுபட முடியாது என கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் அவருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.