May 29, 2021

லட்சத்தில் ஒருவர் - அலி மனிக்பான் (#SaveLakshadweep)


- Muhammad Ibrahim -

இன்று இந்தியா முழுவதுமான பேசுபொருளாக #SaveLakshadweep என்ற கேஷ் டேக் சமூக வளைத்தளங்களில் டிரெண்டாகியுள்ளது. ஒரு பெண் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெறுகிறார். அவரின் பெயரினூடாக அலி மனிகஃபானின் பேத்தி என்ற ஒரு பதாகை மூலம் அவரை அறிமுகம் செய்கிறார்கள். யார் இந்த அலி மனிக் ஃபான். இவரின் சாதனை என்ன? இவர் ஒரு யூதராகவோ, பிராமணராகவோ பிறந்திருந்தால் இவர் இவ்வுலகில் கொண்டாடப்பட்டிருப்பார் மாறாக இவர் பிறந்த  முஸ்லீம் சமூகத்தினுல் கூட சொற்ப நபர்களை தவிர மற்றவர்கள் இவரை அறிந்திடாத ஒரு அற்புத மனிதர். 

லட்சதீவுகளில் உள்ள மினிகாய் (Minicoy) என்ற ஒரு தீவில் 1938 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் இந்த அலி மனிக்ஃபான். இவரின் பத்தாவது வயதில்  தந்தை  மகனின் கல்விக்காக கேரள மாநிலம் கன்ணூருக்கு மனிக்பானை அனுப்பி வைத்தார். 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்த மனிக் ஃபான் அவர்கள் மேற்க்கொண்டு படிப்பில் ஆர்வமில்லாமல் படிப்பை விட்டு விட்டு தனது சொந்த ஊரான லட்சத்தீவுக்கே திரும்புகிறார். முறையான கல்வியறிவு இல்லாமல் எல்லாவற்றையும்  சுயமாக  (Autodidactism) அவரே கற்றுக்கொண்டு கடல்சார் உயிரினம், சூழலியல், வேளாண்மை, கப்பல் கட்டுதல் என பல துறைகளில் சாதனை படைத்துள்ளார்.  திவேகி, ஆங்கிலம், தமிழ், இந்தி, மலையாளம், சமஸ்கிருதம், அரபி, பிரெஞ்சு, ஜெர்மன், பாரசீகம், உர்து, சிங்களம், ரஷ்யா, லத்தீன் என 14 மொழிகளில் சரளமாக உரையாடக்கூடியவர்.

கடல்சார் உயிரியலாளர் டாக்டர் சாந்தப்பன் ஜோன்ஸ் அவர்கள் புதிய மீன்களை பற்றிய இவரின் அறிவையும், அசாதரமான கவனிப்பு திறனையும் கண்டு வியக்களானார். இவர் கண்டுபிடித்த மிகவும் அரிதிலும் அரிதான ஒரு மீன் வகைக்கு Abudefduf manikfani என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இவர் ராமேசுவரத்திலுள்ள மத்திய கடல் சார் துறையில் 1960 முதல் 1980 வரை வேலை செய்து ஒய்வு பெற்ற பின்னர் வேதாளையில் 3 ஏக்கர் நிலம் வாங்கி அதற்கான மின்னினைப்பிற்க்காக பல நாட்கள் காந்திருந்து கிடைக்காமல் தனது சொந்த முயற்ச்சியால் தமக்கான மின்சாரத்தை சொந்த காற்றாலை மூலமாக உற்பத்தி செய்து கொண்டார். 

அயர்லாந்து சாகசக்காரர் டிம் சாவேரின் கேட்டுக் கொண்டதற்க்கிணங்க பழங்கால அரபியர்களின் வாணிபக் கப்பலை ஓமனில் உள்ள Sohar என்ற நகரம் சென்று மறுகட்டுமானம் செய்து கொடுத்தார். இந்த கப்பலின் சிறப்பு யாதெனில் எவ்வித உலோகமும் பயன்படுத்தாமல்  வெறும் மரத்தாலும், 4 டன் கயிறுகளாலும் மட்டுமே கட்டப்பட்டது. பெயருக்கு ஒரு ஆனி கூட இதில் பயன்படுத்தப்படவில்லை. இந்த கப்பலுக்கு சோகர் என்று பெயரிடப்பட்டு ஓமன் மியூசியத்தில் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. 

என்னற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் பற்றிய பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்து கொள்கிறேன். மேற்படி இவரை அறிய கூகுளில் தேடி அறிந்து கொள்ளுங்கள். இந்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து இவரை கவுரவப்படுத்தியுள்ளது.

1 கருத்துரைகள்:

இந்திய அரசு விருது வழங்கி னாலும் இப்போதுள்ள இரத்த வெறி பிடித்த இனவழிப்பு செய்யும் நரமாமிசமுண்ணும் மிருக வம்ச மோடி இந்த லட்சத்தீவு முஸ்லிம்களை என்ன செய்துள்ளான் என்பது இன்னும் வெளிப்படுத்த படாமல் இருப்பது ஏன்?

Post a Comment