Header Ads



முஸ்லிம்களுடன் நல்லுறவு கொண்டிருந்த, பாராளுமன்றம் தெரிவான முதலாவது பௌத்த தேரர் ஷமித காலமானார்


மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த  ​பத்தேகம ஷமித தேரர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இவர்,  தென் மாகாண ச​பையின் முன்னாள் உறுப்பினர் என்பதுடன் பத்தேகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ‘பத்தேகம ஷமித தேரர்‘ கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு மரணமடைந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 69 ஆகும்.

பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படட முதலாவது பௌத்த தேரர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

பலஸ்தீனர்களுக்காக  இலங்கையில் இருந்து குரல்கொடுத்து சில விரல் விட்டு எண்ணக்கூடியவர்களில் இவரும் ஒருவர்.

பலஸ்தீன் ஒருமைப்பாட்டு அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினராகவும் இவர் விளங்கினார்

சிங்கள - முஸ்லிம் நல்லுறவு நல்லிணக்கம் விவகாரங்களிலும் இவர் ஆர்வம் செலுத்தி வந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.



3 comments:

  1. எனது நண்பர் பத்தேகம சமித தேரரின் மரணம் கவலையளிக்கிறது. பல்லின மக்களின் நல்லிணக்கத்தையே இறை சேவையாக ஆற்றிவந்த என் நண்பனுக்கு அஞ்சலிகள்.

    ReplyDelete
  2. Our heartfelt condolences!
    May the Almighty God give peaceful eternal life for him & his family members!!

    ReplyDelete

Powered by Blogger.