Header Ads



எனக்குப் பிடித்தத் தலைவர், மஹிந்த ராஜபக்சதான் - சாணக்கியன் Mp


அரசியலில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர மீண்டும் அரசியலுக்கு வர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை விட தற்போதையப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் தொடர்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனாலேயே 2015ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவால், 2019 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்ததாகத் தெரிவிக்கும் அவர், மஹிந்த ராஜபக்ஷ இல்லை என்றால், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்கிற ஒரு கட்சி இருந்திருக்காதெனவும் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலி​லேயே சாணக்கியன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதோடு, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறமையானத் தலைவரெனவும் ஆனால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைப் போல மக்கள் தொடர்பு அவருக்குக் குறைவெனவும், மக்களுடனானத் தொடர்பாடாலை வளர்த்துக்கொண்டால் நாட்டின் மிகச்சிறந்தத் தலைவராக ரணிலால் இருக்க முடியுமென்றார்.

“எனக்குப் பிடித்தத் தலைவர் பிரதமர் மஹிந்த. பாராளுமன்றத்தில் உள்ள எந்தவொரு புதுமுக உறுப்பினர்களின் பிரச்சினைகளைக்கூட கேட்டறிந்துக்கொள்வார். சிரித்து சகஜமாகப் பழகக்கூடியவர். மஹிந்தவுக்கு மக்கள் தொடர்பு அதிகமாக இருக்கின்றது” என்றும் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு பொதுவேட்பாளராகக் களமிரங்கிய மைத்திரி, தனக்கு வழங்கப்பட்டிருந்தப் பொறுப்புக்களை மறந்துச் செயற்பட்டாரெனவும், ​ஜனாதிபதியானதன் பின்னர் மைத்திரி தவறாக வழிநடத்தப்பட்டார் என்றும் மைத்திரிக்கு நொபேல் பரிசு வழங்க வேண்டுமென பலர் கடந்தக் காலங்களில் கூறியதாகவும் தெரிவித்தார்.

மைத்திரி 2015ஆம் ஆண்டு ஆரம்பித்தப் பயணத்தை அதே முறையில் தொடர்ந்திருந்தால், உலகில் தலைச்சிறந்தத் தலைவராக ந்திருக்க முடியுமெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிறந்த நிர்வாகியாக இருந்தாலும், அவருக்கு அரசியல் அறிவுக் குறைவெனத் தெரிவித்த சாணக்கியன் எம்.பி, 20ஆவது திருத்தம் நிறைவேற்றப் பட்டதன் பின்னர் நாட்டிலுள்ள முத்துறைகளைவிட தான் மேலானவரென ஜனாதிபதி நினைப்பதாகவும் தெரிவித்தார்.

அரசியலில் இருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, மீண்டும் அரசியலுக்கு வர வேண்டுமென தான் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.