Header Ads



பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இப்தாரில், நோன்பு திறந்து, துஆ செய்து, கஞ்சி குடித்த, 6 முஸ்லிம் அரசியல்வாதிகள் (Exclusive Video)


முஸ்லிம் மக்கள் சார்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்தார் நிகழ்வு இம்முறை கொவிட் கட்டுப்பாட்டு விதிகளுக்கு அமைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பங்கேற்புடன் இன்று (05) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.


முஸ்லம் காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து நட்பு ரீதியாக கலந்துரையாடியதுடன், இப்தார் நிகழ்விலும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார்.

அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமை விசேடம்சமாகும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.



4 comments:

  1. Kanji ku picchai edukka pona samooha poralihal

    ReplyDelete
  2. mahinda's envelope is missing on the table for these beggars

    ReplyDelete
  3. எங்களுடைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றென்றும்; அவரகள் தம்முடைய பிரச்சினைகள் பற்றியே ஆளும் தரப்புடன் பேசுவார்கள். மக்கள் பிரச்சினைகள் பற்றி அவரகளுக்கு எந்தவித கவலையுமே இல்லை. இவற்றை கடந்த கால வரலாறே மிகவும் தெளிவாகக் கூறுகின்றது. பிரதமர் அவரகளால் தெரிவு செய்யப்பட்ட "தேர்தல் முறைமை பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களை தவிர்த்துக் கொண்டமைக்காக இலங்கை முஸ்லிம் சமூகம் எமது மதிப்புக்குரிய பிரதமர் மஹிந்த இராஜபக்ஷ ஐயா அவரகளுக்கு பெரிதும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.