Header Ads



இஷாக் Mp யின் முயற்சியில் அனுராதபுரத்தில் 4 முஸ்லிம் தேசிய பாடசாலைகள்


அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் முயற்சியின் பலனாக அனுராதபுர மாவட்டத்தில் நான்கு  முஸ்லிம் பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. அனுராதபுர மாவட்டத்தில் இதுவரை ஒரேயொரு முஸ்லிம் பாடசாலை மாத்திரமே தேசிய பாடசாலையாக காணப்பட்டது. 

கடந்த காலங்களில் மாணவர்களின் கல்வியின் விருத்தி தொடர்பில் கவனம் செலுத்தி மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்களில் கல்வித்தரம் சிறந்து விளங்கும் சில பாடசாலைகளின்  தரமுயர்வு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினரால் அவற்றுக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

முயற்சிகளின் பலனாக தற்பொழுது கெக்கிராவ கல்வி வலயத்திற்கு உற்பட்ட அ/கலாவெவ மத்திய கல்லூரி, கெபித்திகொழ்ழாவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட மஹ்மூத் பதியுதீன் மஹா வித்தியாலயம், கலன்பிந்துனுவெவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட அ/கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயம், அனுராதபுர கல்வி வலயத்திற்கு உட்பட்ட இக்கிரிழ்ழாவ அந்நூர் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்டுள்ளன.

குறித்த பாடசாலைகளின் தரமுயர்வுக்கு தனக்கு தோளோடுதோளாக நின்று உதவிய கல்வியமைச்சர் GL.பீரிஸ், கல்வி மறு சீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலை கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, காணி அமைச்சர் சந்திர சேன, வடமத்தியமாகாண முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் மற்றும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் ஆகியோருக்கு தனது உளப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.

ஐ.எம்.மிதுன் கான்

2 comments:

Powered by Blogger.