Header Ads



மக்கள் பூரணமாக ஒத்துழைக்க வேண்டும் : வைத்திய அதிகாரி Dr தஸ்லீமா வஸீர்


நூருல் ஹுதா உமர் 

டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வஸீர் நுளம்பு கள தடுப்பு பிரிவினர் கலந்து கொண்ட கலந்துரையாடல் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெவித்த காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வஸீர் டெங்கை கட்டுப்படுத்தி நோயிலிருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள தங்களின் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்கும் படி கேட்டுக்கொண்டார். மேலும், 

அதிகமாக நுளம்புகள் பெருகும் இடங்களான இலகுவில் உக்காத டயர், பிளாஸ்டிக் கோப்பை, பிளாஸ்டிக் பொருட்கள், விளையாட்டுப் பொருட் துண்டுகள், பொலித்தீன் துண்டுகள், மெழுகுச்சீலை, பொலிதீன் பை, பிங்கான் கோப்பை துண்டுகள், தயிர்ச்சட்டி, வெற்று பிஸ்கட்/ மீன்டின், போத்தல், மரப்பெட்டி, ரெஜிபோம் பொருட்கள், நத்தை ஓடு, முட்டைக் கோது, தாமதமாக உக்கும் பொருட்களான சிரட்டைகள், இளநீர்க் கோம்பை

விளாம் பழ, பெலிப்பழ வன்கோதுகள், மழைநீர் தேங்கியிருக்கக்கூடிய இடங்கள், அடைபட்ட மழைநீர்ப் பீலி

அடைபட்ட சீமெந்துக் கான், நீர்டைபட்ட கொங்கிறீட் கூரை, சீமெந்து நீர்த்தொட்டி, உயரத்திலுள்ள நீர்த்தாங்கி, தகர உருளை பரல்கள், வாளிகள், பிளாஸ்டிக் நீர்க்கான், கிடாரம், பிளாஸ்டிக் பீப்பாய், சட்டி முட்டிகள், நீர்க் குட்டைகள், பறவைகள் நீராடும் தடாகம், மீன் இல்லாத நீர்த்தொட்டி, நீர் தங்கக்கூடிய சிலை வடிவங்கள், பூச்சாடிகளும் கீழ்வைக்கப்படும் தட்டுகளும், பூச்சாடிகள், குளிரூட்டியிலுள்ள நீர்த்தேக்கித் தட்டு, அறை குளிராக்கியிலுள்ள நீர்த்தேக்கி தட்டு, செல்லப் பிராணிகளின் நீர் உணவுப் பாத்திரங்கள், இலைகளுக்கிடையில் நீர் தங்கவல்ல அழுகுத்தாவரக் கன்றுகள், பெரிய இலைத் தாவரங்கள், மரப் பொந்துகள், வெட்டிய மூம்கில் மரத்தின் அடிப்பாகம், நீர்தேங்கியிருக்கவல்ல வெட்டிய மரப் துண்டுகள் போன்றவற்றில் டெங்கு நுளம்பின் உருவாக்கம் இருந்து அதனால் நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.  தினமும் காலை 10  நிமிடங்கள் ஒதுக்கி உங்கள் சுற்று சூழல் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

No comments

Powered by Blogger.