May 26, 2021

புர்காவை நான் எதிர்க்கிறேன், முகத்தை மூடிக்கொண்டு இருப்பது பயனற்றது, முஸ்லிம் சமூகம் சிந்திக்க வேண்டும் - அலி சப்ரி


புர்கா அணிவது அரேபியக் கலாசாரமெனத் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி, முஸ்லிம் சமூகமே இதனை சிந்தித்து புர்கா அணிவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்புத் துறைமுகநகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றும்போது, அரசாங்கத்துக்கு பாராளுமன்றில் மூன்றிலிரண்டுப் பெரும்பான்மை இருந்தது. எனினும் அனைவரதுக் கருத்துகளையும் கேட்டு நடுநிலைமையாகவே இதன்போது அரசாங்கம் செயற்பட்டது என்றார்.

மேலும் இச்சட்டமூல வாக்கெடுப்பின்போது தனது வாக்கையும், பாராளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத்தின் வாக்கும் கணக்கில் எடுக்கப்படாது தவற விடப்பட்டுள்ளது என்றார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், தற்போதைய அரசாங்கம் புர்காவுக்கு தடை விதிக்கவில்லை. முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களிடமிருந்து பிரிவதற்கு புர்காவும் ஒரு காரணமென கடந்த அரசாங்கம் கூறியது. கடந்த அரசாங்கத்தின் பரிந்துரையே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

புர்காவை நான், எதிர்க்கிறேன். இதனைக் கடந்த பத்து வருடங்களாகவே கூறிவருகிறேன். புர்காவுக்கு தடை விதிப்பதற்கு அப்பால் புர்கா அணியக் கூடாது. தனது மதத்தை மற்​றொருவருக்குக் கொண்டு செல்வது முஸ்லிம்களுக்கு முக்கியமான ஒன்று. எனவே, இதற்கு ஏனையோருடன் முதலில் கலந்துரையாட வேண்டும். இதனை விடுத்து முகத்தை மூடிக்கொண்டு இருப்பது பயனற்றது எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

புர்கா என்பது அரேபியக் கலாசாரம். இதனை சமூகம் என்றவகையில் முஸ்லிம் சமூகமே இதனை சிந்தித்து புர்காவ அணிவதை நிறுத்த வேண்டுமெனவும் தெரிவித்தார்.

32 கருத்துரைகள்:

.கோட்சூட் போடுவது இலங்கை கலாச்சாரமா..

this is your own thoughts or views or opinion

உங்களுக்கு விருப்பம் இல்லாட்டி புர்காவை அணியக் கூடாதா? மதத்தை
சொல்வதற்கு புர்கா தடையாக இருக்கிறதா? பதவியை தந்தும் அல்லாஹ் சோதிப்பான். இருப்பதை இல்லாமல் செய்வது இலகு. ஆனால் பெற்றுக் கொள்வது கடினம்.

He is entering the dangerous zone. I think he has stepped the redline of giving his personal opinion against the law and the preferences of the creator almighty. we cannot expect this from a Muslim

ACJU என்ன சொல்கிறது?

அல்லாஹ்வோ நபியோ தடைவிதிக்கவில்லை (அல்லாஹ்வே நன்கறிந்தவன்). ஆனால் 3 சந்தர்ப்பங்களில் இஸ்லாத்தில் பெண்கள் புர்கா அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. மற்றய சந்தர்ப்பங்களில் விரும்பினால் அணியலாம், அணியாமலும் விடலாம். தடை இல்லை. இதில் கருத்து முரண்பாடே இஸ்லாமிய அறிஞர்களிடம் உள்ளது.

Hia ALI, will agree with me that If I say " I oppose THE Cort suit with tie" that you are wearing because it is western culture.?

Why do you behave ignorant and racist towards a dress court?

Why double standard between Western Cort suit and Burga as you say it is Arab cululture and you oppose it.

All these days I respected you as an educated personal. But today you prove your racism or fearful politics to protect your seat...

Do not get made with dress codes as far as it is not naked as you see around the beach area but yet you do not oppose it,bu you dislike and oppose a modest covering dress code.

Shame..

Is this the very important issue to this person @ this moment ?

Is this the very important issue to this person @ this moment ?

முதுகெலும்பு பலமுள்ள முஸ்லிம் பிரமுகர்தான் நீங்கள். என் போன்ற உங்கள் சிந்தனையுடன் ஒத்துப்பொகின்றவர்கள் அனைவர் சார்பாகவும் வாழ்த்துக்கள் கூறுகின்றேன்.

கௌரவ அமைச்சர் அவர்களே தாடி வைப்பதும் உங்கள் பார்வையில்அரேபியக் கலாச்சாரம் போன்று தெரிகின்றது.
பெண்கள் போன்று எப்பொழுதும் முகத்தைப் பளபளப்பாக வைத்திருக்காமல் மார்க்க அறிவை தகுதியானவர்களிடம் கற்று உங்கள் தகுதி,தராதரத்தைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள்

கௌரவ அமைச்சர் அவர்களே தாடி வைப்பதும் உங்கள் பார்வையில்அரேபியக் கலாச்சாரம் போன்று தெரிகின்றது.
பெண்கள் போன்று எப்பொழுதும் முகத்தைப் பளபளப்பாக வைத்திருக்காமல் மார்க்க அறிவை தகுதியானவர்களிடம் கற்று உங்கள் தகுதி,தராதரத்தைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள்

This is Quran law, don’t say Arabian law Mr.

He not protect muslims rights but try to gave up.

புத்திசாலி அலிசப்ரி அவர்களே!ஒரு விடயம் உங்களின் சிந்தனைக்கு நல்லதாக தென்படாமல் மற்றொருவருக்கு அந்தவிடயத்தில் உண்மையான தெளிவை அடைந்து சரியாக சிந்தித்து அதை அணிகின்றார்கள் நீங்கள் அதை தடுப்பதற்கு சட்டம் வகுப்பது உங்களின் பெரும் முட்டால்தனம்!

இன்று நீங்கள் கோட்சூட் போட்டுள்ளீர்கள் அதை இலங்கைநாட்டு பூர்வீக பலங்குடிமக்கள் அந்த ஆடைகள் அன்னியவர்களின் கலாச்சாரம் என்றும் மேலும் உடலை மறைத்து சட்டை அனிவது இலங்கையர்களின் கலாச்சாரம் இல்லை என்று வாதித்து கொண்டு இன்றும் அவ்வாறே வாழ்கின்றார்கள் இதற்குறிய உங்களின் சட்டம் என்ன அவர்கள் மேலாடை சட்டை அணியவேண்டும் என்று வற்புருத்துகின்றீர்களா!?

நீங்கள் அணிந்துள்ள இந்த ஆடை இலங்கை பலஙகுடிமக்களின் பார்வையில் தவறு என்று கருதுகின்றார்கள்!

இன்று இலங்கையில் உங்களின் ஜனாதிபதி பிரதமர் உங்களின் நண்பர்கள் வணங்கும் பல கடவுள் கோட்பாட்டை திட்டமாக அது பிழை என்று உருதியுடன் இருக்கின்றீர்கள்!அது தவறு என்று அவர்களுக்கு உணர்த்தி அவர்களை படைத்த ஒரேகடவுளின் தண்டனையிருந்து அவர்களை காப்பாற்ற அவர்கள் ஏக ஒரவனாகிய அந்த ஒரே கடவுளை வணங்க வேண்டும் என்று அவர்களுக்கு எடுத்து கூறாமல் அவர்களின் சுகந்திரம் என்று விட்டதைபோல தங்களின் அழகை அவர்களின் கணவர்களைத்திவிர ஏனையவர்களுகு காட்டாமல் முகத்தை மறைக்கும் பெண்களயும் அவர்களின் சுகந்திரம் என்று கூறிவிட்டு இந்த விடயத்தை நீங்கள் தவறு என்று சொல்ல முயற்சிக்காதீர்கள்!

May Allah give u hidayat

பாதிக்கப்பட்டவர்களின் பதுவா உனக்கு போதுமாகும்

'முஸ்லிம்கள் ஏனையோரிடம் இருந்து பிரிந்திருப்பதற்கு புர்கா (முகம் மூடுதல்) ஓர் காரணம்.' என்ற கருத்தில் நியாயம் இருக்கின்றது.

மக்களிடையே அன்பை, மரியாதையை, நல்லுறவை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த இறைவன் ஏற்படுத்தி உள்ள உயர் வழிகள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் இன்முகம் காட்டுவது, புன்னகை புரிவது, நல்வாழ்த்துக்கள் கூறுவது, சுக துக்கம் விசாரிப்பது  போன்றன.

முகத்தை மறைத்திருப்பதால் குறைந்தது சக பெண்களிடம், நபி வழியான  இவற்றைக் கடைப்பிடிக்க எவ்வாறு சாத்தியமாகும்?  மாறாக, வெறுப்புணர்வுகள் வளரவே அவை வாய்ப்பளிக்கின்றன.

தவிரவும், அமைச்சர் இங்கு கூறுவது போல, அனைத்து மனிதர்களுக்கும் சொந்தமான இந்த உயர்தரமான இஸ்லாமிய வாழ்வு நெறி ஏனையோரிடம் பரவாமல் நாமே நமக்கு திரை போட்டதற்குச் சமமான ஓர் செயலாகின்றது இது.

பொது இடங்களில் பெண்களின் முகமும் கரங்களும் திறந்திருப்பதற்கு இஸ்லாம் அளித்துள்ள உரிமைகள் பற்றி உலமாக்கள் உரத்துப் பேச வேண்டிய தேவை இருக்கின்றது.

எதிர்காலத்திலாவது, முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வலைகளையும் அதன் விளைவுகளையும் உதிர்த்துவிட இது உதவும்.

அமைச்சர் அவர்களே புர்கா அரேபிய கலாச்சாரம் என்றால் நீங்கள் அணிந்திருக்கும் ஆடை இலங்கை கலாச்சாரத்தில் உள்ளதா? இலங்கை கலாச்சாரத்தின்படி உடை அணிவதாயின் முதலில் முன்னுதாரணமாக எல்லா அமைச்சர் களுக்கும் கோவணம் கட்ட சொல்லுங்கள்.பெண்களுக்கு சீத்தை ஹெட்டை அணிய சொல்லுங்கள்.நீங்கள் முதலில் அணிந்து விட்டு மற்றவர்களுக்கு சொல்லுங்கள்.

👎👎👎🇨🇳👍👍👍

Pl ref Chapter33:59 to hang theface cover to known and prevent from the others disturbs this quranic vers its not named as burka but mode of dressing more than that every humane have the right to choose their dress basic humane right humane right some thing alien to Srilankan politicians Pl dont drag the religion.


நீதி அமைச்சரே! இஸ்லாம் என்பது கண்டவன், கடியவன் எல்லோரும் உலருவதற்கு வைக்கப்பட்ட மார்க்கமமோ கலாச்சாரமோ அல்ல. யாருக்கோ வால் பிடிக்கவும் பதவியைப் பாதுகாக்கவும் தெரியாதவற்றில் மூக்கை நுழைக்காமல் உங்கள் வேலையைப் பாருங்கள். நீங்கள் படித்தது Islamic Law அல்லவே. அதைப் படித்த ஆலிம்கள் அதைப் பேசட்டும். நீங்கள் பதவிப் பிரமாணம் செய்ய வந்தபோது உங்கள் மனைவியின் ஆடையே உங்கள் இஸ்லாமிய பற்றை நாட்டு மக்களுக்கு அடையாளப்படுத்திவிட்டது. எனவே இஸ்லாத்தை விற்பதைத் தவிர்த்து யாரையும் திருப்திப்படுத்திக் கொள்ளவேண்டியது தானே.

Europe நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் (Baby Suit போன்று) மேலும் கீழும் இரண்டு துண்டுகள் அணிவது தான் இஸ்லாம் என்பீர்களே.

His opinion in this regard shows his knowledge of Islam is is bit low.He should do more research before he talks about this sensitive subject.

He claims that females covering their faces is 'Arabic culture'. If so, how come ONLY in Saudi Arabia that All women cover their faces but NOT in other Arab countries where only some women cover their faces.

Not only in Sri Lanka, but also in other non-Arab and non-Muslim countries, some Muslim women cover their faces. Why do they do that?

முஸ்லிம்களின் பிரதினிதியாக இருக்கும் நிலையில் பொறுப்பு மிக்க ஒரு அமைச்சரின் மார்க்க விடயம் சார்ந்த இக்கூற்று பகிரங்கமாகவும் உடனடியாகவும் கண்டிக்கப் பட வேண்டும்.

*ஹிஜாப் வாஜிபா அல்லது சுன்னாவா* என்பதுதான் கருத்து முரண்பாடான விடயமே தவிர அது *அராபியர்களின் பாலைவன வழக்காறு* என விமர்சிப்பது அண்மைக்காலமாக மதச்சார்பற்றவர்களால் முன்வைக்கப்படும் ஆபத்தான விதண்டாவாதம்.

சம கால சில இஸ்லாமியப் போதகர்களும் இக்கருத்தைச் சார்ந்திருப்பதைக் காணமுடிகிறது.

மார்க்கத்தில் கருத்து முரண்பாடான ஒரு விடயத்தில் பக்குவமான நிலைப்பாட்டில் தொக்கி நிற்பதே ஆரோக்கியமானதும் இறையச்சத்தின் அடியாளமுமாகும்.

தான் சாராத கருத்தை இஸ்லாத்திற்கு முரணானதாக சித்தரிப்பது பக்குவமின்மையும் முரட்டு தைரியமுமாகும்.

முஸ்லிம்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்க வேண்டியவர்கள் உரிமைஇழப்புக்காக அழைப்பு விடுப்பதை என்னவென்று சொல்வது ?

Enda makkalin baduwawukku alahirai allah unnai padu hakkanum

Arafath saifullah வின் சிறந்த கருத்து வரவேற்கத்தக்கது.

புர்கா என்ற ஆடை இஸ்லாத்தை மார்க்க மாகவும் அல்லாஹ் வை வணக்கத்துக்குரிய றப் ஆகவும் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸலாம் அவர்களை தனது வாழ்க்கை வழிமுறையாக பின்பற்றி வாழும் ஈமான் கொண்ட மூமினாண இறை நம்பிக்கை கொண்ட விசுவாசியாக கற்பு மானம் மரியாதையான கண்ணியமான ஒழுக்கமுள்ள இஸ்லாமிய மார்க்கத்தில் பேணுதலான பெண்களின் ஆடை இது அலி சபரிக்கு தெரிய வாய்ப்பில்லை ஏன் என்றால் அவருக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை என்பது அவர் முஸ்லிம்கள் சம்பந்தமாக விடுக்கின்றது கருத்துக்கள் அறிக்கைகள் மூலமாக தெளிவாக தெரிகிறது அத்துடன் அவர் ஒரு மதத்தைப் பற்றி யும் அவர் பின்பற்றுகின்ற மதத்தின் கலாட்சாரம் பற்றியும் பேசுகின்றார் இஸ்லாம் சம்பந்தப்பட்ட மார்க்க அறிவு அவரிடம் துளி அளவு கூட கிடையாது உலக அறிவு விடயத்தில் அவர் ஹீரோ வாக இருக்கலாம் மார்க்க அறிவு விடயத்தில் அவர் ஸீரோ (zeero ) ஏன் என்றால் புர்கா என்பது அரேபியர்களின் ஆடை கலா ட்ச்சாரம் என்கின்றார்.அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்கின்றார்கள் இறை நம்பிக்கை கொண்ட விசுவாசியான கண்ணியமுள்ள பெண்களின் ஆடை என்று. இறை நம்பிக்கை கொண்ட விசுவாசம் உள்ள பெண்கள் அரேபியாவில் மாத்திரம்தான் இருக்கிறீர்களா ? அல்லது இந்த இஸ்லாமிய மார்க்கம் அரேபியர் களுக்கு மாத்திரம் அருளப்பட்டதா ?

தெரிந்த விடயத்தை மட்டும் பேசுவதும் தெரியாதனவற்றை அப்படியே விட்டுவிடுவதும் காலத்திற்கு மிகவும் ஏற்றமானதாகும்.அந்தந்ந வேலைகளைப் பார்க்க அந்தந்த ஆட்கள் இருக்கின்றார்கள். எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கப்போனால் வாங்கிக்கட்ட வேண்டியும் வரும்.

Post a Comment