Header Ads



ஜனாஸா அறிவித்தல்


தல்கஸ்பிட்டிய, பெரியக்கரையை சேர்ந்த காலஞ்சென்ற O.L.M.அப்பாவின் மகனும், துபாயில் பணிபுரியும் சகோதரர் நிஸ்தார் அவர்களின் சகோதரருமான சவூதி அரேபியாவில் பணிபுரிந்த,  சகோதரர் எம். எச்.எம். ஹசன் அவர்கள் சற்று முன்னர் இலங்கையில் காலமானார். 

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் பாயிஷா அவர்களின் அன்புக் கணவரும் ஹப்சா,ஹாலா ஆகியோரின் தந்தையும் ஆவார்.

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக

மேலும் அவரின் பிரிவுத் துயரில் வாடும் குடும்பத்தினருக்கு அவரின் இழப்பை தாங்கும் மன வலிமையை வழங்குவானாக 

ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும் பின்னர் நீங்கள் நம்மிடமே மீட்கப்படுவீர்கள்

(அல்குர்ஆன்)

அன்னார்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு covid 19 positive ஆகியுள்ள நிலையில் மரணித்துள்ளமையால் ஊர் மக்கள் ஜனாசாவிற்கு சமூகமலிக்காமல் தத்தமது வீடுகளில் இருந்தவாறே அவருக்காக துஆ செய்யுமாறும் ஊர் மக்கள் மிகவும் கவனமாக இருந்து கொள்ளுமாறும் அன்பாய் கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் ஜனாஸா ஊருக்கு கொண்டு வரப்பட மாட்டாது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்

No comments

Powered by Blogger.