Header Ads



தோல்வியுற்ற தம்மிக்க பாணி, தயாரிப்பை கைவிடுமாறு அறிவிப்பு (காணொளி)


மருத்துவ பரிசோதனைகளில் தோல்வியுற்ற பாணி மருந்து தயாரிப்பை கைவிடுமாறு, அதனை உற்பத்தி செய்யும் தம்மிக்க பண்டாரவுக்கு எழுத்து மூலமாக இன்றைய தினம் -06- அறிவிக்கப்படவுள்ளது.

சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலதிக உணவாக இந்த பாணியை உற்பத்தி செய்வதற்கு ஆயுர்வேத திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், அதற்கான காலம் தற்போது முடிவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இந்த பாணி மருந்தினால் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களை குணப்படுத்த முடியும் என தம்மிக்க பண்டார தொடர்ந்தும் வலியுறுத்தியதன் காரணமாக, அது இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த முடிவுகளின்படி, தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட பாணி மருந்து, எந்தவகையிலும் கொவிட் 19 நோய்க்கு மருந்தாக அமையாது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஒழுங்குவிதிகள் குழு, தமது அறிக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பிகும், இந்த நிபுணர் குழுவின் அறிக்கையை தாம் ஏற்கவில்லை என்று தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இலங்கையின் ஒரே ஒரு கண்டுபிடிப்பு.

    ReplyDelete

Powered by Blogger.