Header Ads



என்­றென்றும் பலஸ்தீனர்ளுடனேயே நாங்கள் இருக்கிறோம் - தூதுவரை தொடர்புகொண்ட பிரதமர் மஹிந்த தெரிவிப்பு


பலஸ்தீன் மீது கடந்த சில தினங்­க­ளாக இஸ்ரேல் கடு­மை­யான தாக்­கு­தல்­களை நடாத்­தி­வரும் நிலையில், அங்­குள்ள நிலை­வ­ரங்கள் தொடர்பில் தாம் கவ­லை­ய­டை­வ­தா­கவும் தாம் என்­றென்றும் பலஸ்­தீன மக்­க­ளு­ட­னேயே இருப்­ப­தா­கவும் பிர­தமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்­றைய தினம் -16- இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதுவர் கலா­நிதி தார் சுஹைர் ஹம்­ம­தல்­லாவை தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு உரை­யா­டி­ய­போதே பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ச இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

“பலஸ்­தீனில் நடப்­பவை கவ­லை­ய­ளிக்­கின்­றன. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இலங்கை மக்கள் சார்பில் எமது அனு­தா­பங்­களைத் தெரி­விக்­கிறோம். பலஸ்­தீ­னுக்­கான இலங்­கையின் ஒரு­மைப்­பாட்டை மீளவும் உறு­திப்­ப­டுத்­து­கிறோம்” என்றும் பிர­தமர் இதன்­போது தூது­வ­ரிடம் தெரி­வித்தார்.

இதே­வேளை நேற்று முன்­தினம் இலங்­கைக்­கான பலஸ்­தீன தூது­வரை தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு உரை­யா­டிய வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்­த­னவும் பலஸ்­தீ­னுக்­கான இலங்­கையின் ஆதரவை வெளிப்படுத்தியதாகவும் பலஸ்தீன தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.-Vidivelli

No comments

Powered by Blogger.