Header Ads



வீடுகளில் கூட்டாக நடாத்தப்படும் அனைத்து வணக்கவழிபாடுகளும் தடை - கிண்ணியாவில் உத்தரவு


திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக தற்போது மிக வேகமாக அதிகரித்துவரும் கொரோனா தொற்றினை கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது . இவை இன்று (05)முதல் மறுஅறிவித்தல் வரும்வரை அமுல்படுத்தப்படுவதோடு இத்தீர்மானங்களுக்கு பொதுமக்கள் பரிபூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என கிண்ணியா கொவிட்19 கட்டுப்பாட்டு குழு கூட்டத்தில் குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

அனைத்து மதஸ்தலங்களும் உடனடியாக மூடப்படும் . அத்துடன் வீடுகளில் கூட்டாக நடாத்தப்படும் அனைத்து வணக்கவழிபாடுகளும் தடைசெய்யப்படுகிறது ,

அத்தியவசிய தேவைகளுடைய பார்மஸி , குரோஸரி , மீன் மற்றும் இறைச்சிக்கடை மற்றும் மரக்கறிக்கடைகள் தவிர்ந்த அனைத்து கடைகளும் மூடப்படும் . அவ்வாறு திறக்கப்படும் கடைகள் உரிய சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்கப்படவேண்டும் . மீறுபவர்களது கடைகளும் உடனடியாக மூடப்படும் . 

அத்துடன் வீடுகளில் மேற்கொள்ளப்படும் வியாபாரங்களும் தடைசெய்யப்பட்டுள்ளது . அத்துடன் இது கண்டறியப்பட்டால் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்,

வெளியூர்களுக்கு செல்வதற்கு முற்றாக தடை . அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரம் சுகாதார வைத்திய அதிகாரியின் முன்அனுமதியினைப் பெற்றுச் செல்ல முடியும் . ,

அனைத்து போக்குவரத்து வாகனங்களிலும் 50 வீதமானோர் மட்டுமே பயணம் செய்ய முடியும் ,

,அத்தியவசிய தேவைகளுக்கான அலுவலகங்கள் தவிர மற்றைய அனைத்து அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை 50 வீதமாக மட்டுப்படுத்தப்படவேண்டும் . 

அத்துடன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் அனைத்தையும் மிகக்கவனமாக பின்பற்றுதல். போன்றன தற்போதைய கூட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடன் அதிரடி நடவடிக்கையாக கிண்ணியா பிரதான வீதியில் உள்ள அத்தியவசிய தேவைப்பாடுகள் அற்ற கடைகளை உடன் மூடுவதற்கு களத்திற்கு நேரடி விஜயம் செய்த கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எம்.ஹனி தலைமையிலான குழுவினர் கடைகளை மூடுமாறு பணித்தார்கள்.ஒலி பெருக்கி மூலமாகவும் கொவிட்19 கட்டுப்பாடு சுகாதார நடைமுறைகள் தொடர்பிலான விழிப்புணர்வுகளையும் செய்தவாறு கடைகள் மூடப்பட்டுள்ளது .குறித்த நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.றிஸ்வி,குறிஞ்சாக் கேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.அஜீத் மற்றும் கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் உட்பட பலரும் கலந்து கொண்டு களத்தில் இறங்கியுள்ளார்கள்.

No comments

Powered by Blogger.