Header Ads



இஸ்லாம் பாடத்தில் A சித்தி பெற்ற, மாணவி நதீஷா இளங்­கோவன் கூறு­வது என்ன..?

- எம்.ஏ.எம். அஹ்ஸன் -

இனம் மற்றும் மதக்­கு­ழுக்­க­ளுக்கு இடையில் மோதல்­களை சந்­திக்கும் முக்­கி­ய­மான நாடு­களுள் இலங்­கைக்கு பிர­தான இடம் இருக்­கி­றது என்­பது கசப்­பான உண்மை. கடந்த காலங்­களில் ஏற்­பட்ட உள்­நாட்டு யுத்தம் உட்­பட கல­வ­ரங்கள், குண்­டு­வெ­டிப்­புகள் என அனைத்­துமே இதற்கு சாட்­சி­யாகும்.

தாம் பின்­பற்­று­கின்ற சமயம் தவிர்ந்த ஏனைய சம­யங்கள் மற்றும் குறித்த சம­யங்­களைப் பின்­பற்றும் மனி­தர்­களின் உணர்­வு­களைப் புரிந்­து­கொள்­வதில் குறை­பா­டுகள் இருக்­கின்­ற­மையே இவ்­வா­றான இன, மத முரண்­பா­டுகள் இலங்­கையின் தசாப்த கால­மாக தொடர்­வ­தற்குப் பிர­தான கார­ண­மாகும்.

தமது மதத்தின் வணக்க வழி­பா­டு­களை மதிக்கும் ஒரு­வ­ரினால் ஏனைய வணக்க வழி­பாடு ஒன்றை விமர்­சிக்­கத்தான் முடி­கி­றதே தவிர குறைந்­த­பட்சம் அது அவர்­களின் நம்­பிக்கை என கடந்து செல்­ல­வா­வது முடி­ய­வில்லை என்­பது துர­திஷ்­டமே. அத­னால்தான் பாட­சாலைக் கல்வி தொடக்கம் ஏனைய சம­யங்கள் தொடர்­பான அறிவு வழங்­கப்­பட்டால் இவ்­வா­றான புரி­த­லின்­மையை தவிர்க்­கலாம் என்­கின்ற கருத்து புத்­தி­ஜீ­வி­களால் வெகு­வாக வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கி­றது.

இப் பின்­ன­ணியில் இலங்­கையில் இன, மத ரீதி­யாக பாட­சா­லைகள் வகைப்­ப­டுத்­தப்­பட்டு அதற்­கேற்­பவே மதக் கல்­வியும் ஊட்­டப்­ப­டு­கின்ற நிலையில், ஒரு மதத்தைப் பின்­பற்றும் மாணவன் அல்­லது மாணவி வேறு ஒரு சம­யத்தைக் கற்று அதில் தேர்ச்சி பெறு­வது பற்­றிய தேடல் ஒன்றை மேற்­கொண்டோம். அதற்­க­மைய வேறு சமய பாடங்­களைக் கற்று சிறப்புச் சித்தி பெற்ற சில மாண­வர்­களை எம்மால் கண்­ட­றிய முடிந்­தது,

சைவ சம­யத்­திற்கு மாற்­றீ­டாக தனது பாட­சா­லையில் இஸ்லாம் பாடத்­தினைக் கற்ற மாணவி நதீஷா இளங்­கோவன் இது தொடர்­பாக தெரி­விக்­கையில் “எல்லா சம­யங்­களும் நல்ல விட­யங்­களை மட்­டுமே போதிக்­கின்­றன. மனதில் உறு­தியும் பெற்­றோரின் பக்­க­ப­லமும் இருக்­கின்­ற­போது இந்த விடயம் சாதா­ர­ண­மா­னதே” என தெரி­வித்தார்

முஸ்­லிம்கள் செறிந்து வாழும் பேரு­வ­ளையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட நதீ­ஷா­வுக்கு கல்வி கற்க அருகில் தனி­யான சைவ பாட­சா­லைகள் இருக்­க­வில்லை. இந்­நி­லையில் தனது வீட்­டுக்கு அரு­கி­லுள்ள நளீம் ஹாஜியார் பெண்கள் கல்­லூ­ரியில் நதீஷா சேர்க்­கப்­பட்டார். வீட்டில் சைவ முறை­களைப் பின்­பற்­றிய அவ­ருக்கு சைவத்­திற்கு மாறாக இஸ்லாம் பாடத்­தினைக் கற்­பது ஆரம்­பத்தில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது. சிறு­மி­யாக இருந்த நதீ­ஷா­வினால் அதை ஏற்­றுக்­கொள்ளும் பக்­குவம் இருக்­க­வில்லை. ஆனாலும் தந்தை இளங்­கோவன் மற்றும் தாய் ஷாந்தி தேவி ஆகியோர் வழங்­கிய ஆத­ரவு அவ­ருக்கு புரி­த­லினை ஏற்­ப­டுத்­தி­யது.

பரீட்­சையில் தோல்­விகள் வந்து விடக்­கூ­டாது என்­ப­தற்­காக ஆரம்­பத்தில் இஸ்லாம் பாடத்­தினை நதீஷா படிக்கத் தொடங்­கி­ய­போதும் காலப்­போக்கில் அதுவே தனக்கு மிகவும் பிடித்­த­மான பாட­மாக மாறிப்­போகும் என்று அவர் ஒரு­போதும் நினைத்­தி­ருக்­க­வில்லை. பரீட்­சைக்கு வரக்­கூ­டிய குர்ஆன் வச­னங்கள் மற்றும் ஹதீஸ் வச­னங்­களை மிகவும் விருப்­பத்­துடன் மனனம் செய்­வ­துடன் அதில் உள்ள நல்ல விட­யங்­களை தனது குடும்­பத்­து­டனும் அவர் பகிர்;ந்து கொள்வார். என்­ற­போ­திலும் தான் பின்­பற்றும் சம­யத்தின் நெறி­மு­றை­களைப் பேணு­வ­தற்கும் அவர் தவ­றி­ய­தில்லை.

நதீ­ஷாவின் உடன் பிறந்த சகோ­தரி ஹர்­ஷனி இளங்­கோவன் சைவ­நெ­றிக்கு பக­ர­மாக நளீம் ஹாஜியார் பெண்கள் கல்­லூ­ரியில் இஸ்லாம் பாடத்­தி­னையே கற்­கிறார். அவ­ரு­டைய தம்பி டிலான் தனுஷன் அரு­கி­லுள்ள சிங்­கள மொழிப் பாட­சாலை ஒன்றில் சைவ நெறிக்கு பக­ர­மாக பௌத்த தர்­மத்­தி­னையே கற்று வரு­கிறார்.

முஸ்லிம் பாட­சா­லையில் நதீஷா கற்­ற­போதும் இந்து மாணவி என்ற அடை­யா­ளத்­து­ட­னேயே அவர் இருந்தார். முஸ்லிம் மாண­விகள் அணியும் பர்தா என்ற ஆடையை அணிந்தால் மாத்­தி­ரமே விளை­யாட்டு அணி­வ­குப்பில் கலந்­து­கொள்ள முடியும் என்ற நிலை­மை­யினால் தனக்கு அந்த வாய்ப்பு கிட்­ட­வில்லை என்­பது அவ­ரு­டைய சிறு வருத்தம். இஸ்­லா­மிய அறி­வுப்­போட்­டி­க­ளான மீலாதுன் நபி விழா போன்ற போட்­டி­களில் பங்­கு­பற்­று­வ­தற்கு விருப்பம் இருந்­த­போ­திலும் விமர்­ச­னங்­க­ளுக்கு அஞ்சி அவற்றில் பங்­கு­பற்­று­வதை நதீஷா தவிர்த்து வந்தார். சவால்­களைத் தாண்டி தனக்கு மிகவும் பிடித்த இஸ்லாம் பாடத்தில் இந்து மாண­வி­யான நதீஷா இளங்­கோவன் சிறப்­புச்­சித்­தி­யான ஏ சித்­தியைப் பெற்றார்.

தாம் பின்­பற்­று­கின்ற சம­யத்தை விடுத்து இன்­னொரு சம­யத்தை கற்­பத்­தினால் மொழி விருத்தி, புரிந்­து­ணர்வு, சமா­தானம் என்­ப­வற்றை பெற்­றுக்­கொள்ள முடி­வ­துடன் வீணான தப்­பெண்­ணங்­க­ளையும் களைந்­தெ­றிய முடி­கின்­றது. இந்;த அனு­ப­வத்தை தெல்­தெ­னிய தேசிய பாட­சா­லையில் கல்வி கற்ற ரமீஷ் கான் பெற்­றி­ருக்­கிறார். பிறப்பில் முஸ்­லி­மாக இருக்கும் இவர் பௌத்த சம­யத்தில் சொல்­லப்­பட்­டி­ருக்­கின்ற விட­யங்­க­ளையும் மதிக்­கிறார். குறித்த சம­யத்­தினை பாட­சாலைச் சூழலில் கற்­ப­தற்கு சந்­தர்ப்பம் கிடைத்­ததை நல்­ல­தொரு வாய்ப்­பா­கவே ரமீஷ் கரு­து­கின்றார். “முஸ்­லிம்­க­ளுக்கும் பௌத்­தர்­க­ளுக்கும் இடையில் ஏற்­படும் மோதல்­க­ளுக்­கான கார­ணங்­களை என்னால் இல­கு­வாக புரிந்­து­கொள்ள முடி­கின்­றது. இதற்­கான கார­ணங்கள் தொடர்­பான தெளிவு எனக்கு உட­ன­டி­யாக கிடைப்­ப­துடன் அவை தொடர்­பாக உரிய தர­வு­க­ளுடன் அவர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்க என்னால் முடி­கி­றது” என ரமீஷ் தெரி­விக்­கிறார்.

சமூக ஊட­கங்­களில் இஸ்லாம் சமயம் விமர்­சிக்­கப்­ப­டும்­போது தனது பாட­சா­லையில் பெற்­றுக்­கொண்ட பௌத்த சமய ஆதா­ரங்­களை பயன்­ப­டுத்தி சமூக ஊடக பாவ­னை­யா­ளர்­களை தெளி­வு­ப­டுத்தும் பணியை ரமீஷ் மேற்­கொள்­கிறார்.

எவ்­வா­றாக இருந்த போதிலும் பாட­சாலைக் கல்­வியில் ஏதா­வ­தொரு சமயம் கட்­டா­யப்­ப­டுத்தி கற்­பிக்­கப்­ப­டு­வது ஆரோக்­கி­ய­மான கல்வி முறை­யாக இல்லை என கிராஸ் ரூட் ட்ரஸ்ட் அமைப்பின் ஸ்தாபக தலை­வரும் சமூக ஆர்­வ­ல­ரு­மான ஹான்ஸ் பில்­லி­மோ­ரியா கரு­து­கின்றார். அத்­துடன் குறித்த நபர் அவ்­வாறு பிறி­தொரு சம­யத்தை கற்க விரும்­பினால் அவ்­வாறு கற்­பதில் எவ்­வித பிழையும் இல்லை என்றும் அவர் தெரி­விக்­கிறார். இது தொடர்­பாக கருத்து வெளி­யி­டு­கையில் “சமயம் என்­பது பாட­சா­லை­களில் கட்­டாயப் பாட­மாக இல்­லாமல் தெரிவுப் பாட­மாக இருப்­பது நல்­ல­தொரு விட­ய­மாக அமையும். பொது­வாக எல்­லோ­ரு­டைய வீட்­டுச்­சூ­ழ­லிலும் சம­யக்­கல்வி செயன்­மு­றையில் இருக்­கின்­றது. இப்­ப­டி­யி­ருக்க பாட­சா­லை­களில் கட்­டா­யப்­ப­டுத்தி ஒரு சம­யத்தை கற்­பிப்­பது நல்­ல­தல்ல. மாறாக ஒன்­றுக்கு மேற்­பட்ட சம­யங்­களை ஒப்­பீட்டு அடிப்­ப­டையில் கற்­பிக்கும் பாடத்­திட்டம் ஒன்றே இப்­போது தேவை­யாக இருக்­கி­றது” என தெரி­வித்தார்.

சமயம் என்ற பாடத்தின் அடிப்­ப­டை­யி­லேயே பாட­சா­லைகள் மத்­தியில் இன மத அடிப்­ப­டையில் பாரிய பிரி­வினை ஒன்று தென்­ப­டு­கின்­றது. சமயம் தெரி­வுப்­பா­ட­மாக மாறினால் அந்­தப்­பி­ரி­வி­னையை முற்­றாக ஒழிக்க முடியும் என ஹான்ஸ் கரு­து­கின்றார். அத்­துடன் சமயம் கற்­பிப்­ப­தாக இருந்தால் இலங்­கையில் பின்­பற்­றப்­படும் அனைத்து சம­யங்­க­ளையும் உள்­ள­டக்­கிய ஒரு பொது­வான பாடத்­திட்­ட­மாக சமயம் அமைய வேண்டும் என்றும் அது கூட தெரி­வுப்­பா­ட­மா­கவே இருக்க வேண்டும் என்றும் ஹான்ஸ் விரும்­பு­கிறார்.

தற்­போது இது­போன்ற ஒப்­பீட்டு சம­யக்­கல்­விக்கு வாய்ப்பு இல்­லாத தரு­ணத்தில் மாற்­று­மத பாட­சா­லை­களில் கற்­பது பிழை­யான தெரிவு கிடை­யாது என்­பது சமய மற்றும் சமூக ஆர்­வ­லர்­களின் கருத்­தாகும்.

ரமீஷ் கானின் அனு­ப­வங்­க­ளின்­படி சிங்­களப் பாட­சா­லையில் பௌத்த சமயம் கற்­பது ஒரு அசா­தா­ர­ண­மான விட­ய­மாக அவ­ருக்கு இருக்­க­வில்லை. சிங்­கள மொழியின் முக்­கி­யத்­துவம் மற்றும் சிங்­களப் பாட­சா­லை­களின் கல்வித் தரம் என்­ப­வற்றை கருத்­தில்­கொண்டே தமது பெற்றோர் தன்னை சிங்­கள மொழிப்­பா­ட­சாலை ஒன்றில் சேர்த்­தார்கள் என்று தெரி­விக்கும் அவர், அதற்கு நேர­டி­யாக எந்­த­வித விமர்­ச­னமும் இருக்­க­வில்லை என்றும் தெரி­விக்­கிறார். “மறைவில் சிலர் விமர்­சித்­தார்கள். பிள்­ளை­களை சிங்­களக் கோலத்தில் வளர்க்­கி­றார்கள் என்று ஒரு சில உற­வி­னர்கள் சாடை பேசி­னார்கள்” என்று தெரி­விக்கும் ரமீஷ் அதை ஒரு பெரிய விட­ய­மாக எப்­போதும் கருத்தில் கொண்­ட­தில்லை என கூறு­கின்றார்.

இலங்­கையில் மத அல்­லது இன அடிப்­ப­டை­யி­லான பாட­சா­லைகள் இருக்கும் நிலை­மையை மாற்­று­வது கடி­ன­மான ஒரு விடயம். கிறிஸ்­தவ மிஷ­னரி அல்­லது சர்­வ­தேச கிறிஸ்­தவ பாட­சா­லை­களில் சமயம் என்ற பாடத்­திற்கு மாற்­ற­மாக ‘ஒப்­பீட்டு சமயம்’ (Comparative Religion) என்ற பாடமே கற்­பிக்­கப்­ப­டு­கின்­றது. அமெ­ரிக்­காவின் சர்­வ­தேச பாட­சா­லைகள், கல்­லூ­ரிகள் மற்றும் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் சமயம் என்ற பாடத்­திற்கு மாற்­றீ­டாக ‘உலகின் சம­யங்கள்’ (World’s Religion) என்ற பாடமே கற்­பிக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் 1940 இல் அறி­முகம் செய்­யப்­பட்ட இல­வசக் கல்­வித்­திட்­டத்தில் இந்த நடை­மு­றை­க­ளுக்கு மாற்­ற­மாக தாம் பின்­பற்றும் குறிப்­பிட்ட ஒரு சம­யத்தை மாத்­திரம் கற்கும் நிலை­மைதான் இலங்­கையில் இருக்­கி­றது.

சர்­வ­தேச இள­மா­னிப்­பட்­டங்­களை கற்கும் இலங்கை மாண­வர்­க­ளுக்கு ஆரம்­பத்தில் உலகின் சம­யங்கள் எனும் பாடத்­தினை கற்­பித்த பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யாளர் பேரா­சி­ரியர் எம்.எஸ்.எம். அனஸ் இலங்கை பாட­சா­லை­களின் சமய பாடத்­திட்டம் குறித்து கருத்து தெரி­விக்­கையில் “பாடத்­திட்­டத்தில் சமயம், சமயம் என்றால் என்ன?, சம­யங்கள் தோன்­றிய பின்­னணி, உலகில் இருக்­கின்ற பல்­வேறு சம­யங்கள் தோன்­றிய வர­லா­றுகள் என்­பன இணைக்­கப்­பட்டு போதிக்­கப்­பட வேண்டும். பாடத்­திட்­டத்தில் வெவ்­வே­றாக தாம் பின்­பற்றும் குறிப்­பிட்ட ஒரு சம­யத்­திற்கு கூடுதல் முக்­கி­யத்­துவம் வழங்­கு­கின்ற அதே­வேளை உலகில் இருக்­கின்ற ஒவ்­வொரு சமயம் தொடர்­பான விவ­ர­ணங்­களும் உள்­ள­டக்­கப்­பட வேண்டும்” என தெரி­வித்தார். அத்­துடன் இவ்­வா­றான கல்வி முறைகள் நடை­முறைச் சாத்­தியம் ஆகும் வரை தவிர்க்க முடி­யாத சந்­தர்ப்­பங்­க­ளின்­போது ஏனைய சமய பாட­சா­லை­க­ளுக்கு பிள்­ளை­களை குறித்த சமய அறிவைப் பெற்றுக்கொள்ள அனுப்புவதற்கு அச்சப்படத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

மதங்களை அடிப்படையாகக் கொண்டு கலவரங்கள் தோன்றும் இலங்கை போன்றதொரு நாட்டில் தாம் பின்பற்றும் சமயம் தாண்டி ஏனைய சமயங்கள் தொடர்பான அறிவு மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. மேற்குறிப்பிட்ட விடயங்கள் ஊடாக இலங்கையின் கல்வி முறையில் அதிரடி மாற்றங்கள் தேவை என்பது புலனாகின்றது. அதே­நேரம் இத்­தனை முரண்­பா­டு­களைத் தாண்டி தவிர்க்க முடி­யாத சந்­தர்ப்­பங்­க­ளினால் தமது பிள்­ளை­களை அந்­நிய மத பாட­சா­லை­களில் சேர்ப்­ப­தற்­கான நிலை­மைக்கு பெற்­றோர்கள் வீணாக அஞ்­சத்­தே­வை­யில்லை. குறித்த சம­யத்தின் ஊடாக கிடைக்கும் அறிவு எதிர்­கால வாழ்க்­கைக்கு அவ­சி­யமே தவிர அநா­வ­சியம் அல்ல. எதிர்­கா­லத்தில் சம­யங்­க­ளி­டையே புரிந்­து­ணர்வு கொண்ட ஒரு சந்­த­தியைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மானால் சக­லரும் சகல மதங்­க­ளையும் கற்கக் கூடிய கல்­வித்­திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதுவே பன்­மைத்­து­வத்தை அங்­கீ­க­ரித்து வாழக் கூடிய தலைமுறை ஒன்றை வளர்த்தெடுக்க உதவி புரியும்.- Vidivelli

3 comments:

  1. பாராட்டுக்கள்.  ஆம், குறைந்த பட்சம் தேசிய மதங்கள், தேசிய மொழிகள் ஆகிய இரு பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுவது அபார நன்மைகளைக் கொண்டுவரக்கூடியது.

    ReplyDelete
  2. முன்னைய காலத்தில் முஸ்லிம் மாணவர்கள் vadakil indu சமயத்தை சர்வ சாதாரணமாக கற்று த்தான் இருக்கிறார்கள். LTTE என்றைக்கு எம் நாட்டில் முளைத்ததோ அன்றிலிருந்து முஸ்லிம்கள் thaniyaakkapadu அக்கிரமம் செய்யப்பட்டது (மன்னார் maqbool கொலை முதல் வடக்கு இன சுத்திகரிப்பு வரை ) இன்று வரை இலங்கை முழுவதும் இன வேறுபாட்டுக்கு வழி காட்டியுள்ளது.

    ReplyDelete
  3. முன்னைய காலத்தில் முஸ்லிம் மாணவர்கள் vadakil indu சமயத்தை சர்வ சாதாரணமாக கற்று த்தான் இருக்கிறார்கள். LTTE என்றைக்கு எம் நாட்டில் முளைத்ததோ அன்றிலிருந்து முஸ்லிம்கள் thaniyaakkapadu அக்கிரமம் செய்யப்பட்டது (மன்னார் maqbool கொலை முதல் வடக்கு இன சுத்திகரிப்பு வரை ) இன்று வரை இலங்கை முழுவதும் இன வேறுபாட்டுக்கு வழி காட்டியுள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.