Header Ads



அசாத் சாலியின் அடிப்­படை உரிமை மீறல், மனு எந்த நிலையில் உள்ளது..?


(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் சிறப்புக் குழு­வி­னரால் கைது செய்­யப்­பட்ட நிலையில், அவர் தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆரம்பகட்ட விசா­ர­ணையின் அறிக்கை சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. சி.ஐ.டி.யின் விஷேட விசா­ரணைப் பிரிவு இலக்கம் 1 இன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜயந்த பயா­க­லவின் பொறுப்பில், அசாத் சாலி தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­பட்டு வரும் நிலை­யி­லேயே, இந்த முதல் கட்ட விசா­ரணை அறிக்கை சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்­பப்பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. அந்த அறிக்­கை­யினை ஆராய்ந்த பின்னர் சட்ட மா அதிபர் அளிக்கும் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமைய அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்பில் சி.ஐ.டி. செயற்­படும் என பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

அசாத் சாலியின் கைது தொடர்பில் பிர­தா­ன­மாக மாவ­னெல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தை கோடிட்டு, அடிப்­ப­டை­வா­தி­களை பாது­காத்­த­தாக கூறி கொழும்பு பிர­தான நீதிவான் புத்­திக ஸ்ரீ ராகல முன்­னி­லையில் சி.ஐ.டி. பீ அறிக்கை சமர்ப்­பித்­துள்ள நிலையில், அதனை மையப்­ப­டுத்­தியே விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

இவ்­வா­று­அசாத் சாலியை தடுத்து வைத்து விசா­ரணை செய்­வ­தற்­கான அனு­ம­தியை, பாது­காப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ, MOD/ LEG/ PTA/ 21/2021 எனும் கடிதம் ஊடாக 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு வழங்­கி­யுள்ளார். அர­சி­ய­ல­மைப்பின் 44 (2) ஆம் உறுப்­பு­ரை­யுடன் இணைத்து வாசிக்­கப்­பட வேண்­டிய 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 9 (1) ஆம் பிரிவின் கீழ் இந்த தடுப்புக் காவல் அனு­மதி ஜனா­தி­ப­தி­யினால் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் கைது மற்றும் தடுத்து வைப்­புக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள அடிப்­படை உரிமை மீறல் மனு அடுத்­த­வாரம் பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும் என தெரிகிறது. அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.- Vidivelli

No comments

Powered by Blogger.