Header Ads



தொலைக்காட்சி பெட்டியொன்று ரஞ்சனுக்கு வழங்கப்பட்டது


அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பயன்படுத்துவதற்காக, பிரத்தியேகமான  தொலைக்காட்சி பெட்டியொன்று வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் ​கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

தனக்கு பிரத்தியேகமான தொலைக்காட்சி பெட்டியொன்று ​தேவையென ரஞ்சன் ராமநாயக்க விடுத்த கோரிக்கைக்கமையவே ,இது வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக ரஞ்சன் ராமநாயக்கவின் பிரத்தி​யேக பயன்பாட்டுக்காக, ​மெத்தை, மின்விசிறி, குளியலறை வசதிகள் என்பன வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.