Header Ads



முச்சக்கர வண்டி சாரதியின் மகள், தேசிய ரீதியில் முதலிடம் பெற்று மகத்தான சாதனை


அகில இலங்கை ரீதியாக கலைப்பிரிவில் தேசிய ரீதியாக முதலாம் இடத்தினை தெகிவளை பெஸ்ப்தேரியன் பாடசாலையில் கற்கும் சமல்ஹா சிவ்மினி பெற்றுள்ளாா்.  சிவ்மினி தெகிவளை மிருகட்சிச் சாலை பின்புறத்தில் உள்ள 2 பேர்ச் மாநகர  வீட்டுத்தி்ட்ட  குடியிருப்பில் வாழ்கின்றாா். தந்தை சாதாரனமாக வாடகைக்கு அமா்தத்ப்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுணா். கொவிட் காலத்தில் மட்டும் ஸூம் ஒன்லைன் 2 பாடங்களை மட்டுமே படித்தேன்.  க.பொ.த.சா-த தரத்தில் சிறந்த பெறுபேறுகள் எடுத்தும் நான் கலைப்பிரிவினையை விரும்பிப் படித்தேன் அதில் மனைவியல் பொருளாதாரம் , ஊடகம், அரசியல் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை விரும்பி வீட்டில் படித்தேன். கொவிட் காலங்களில் அனேகமாக பாடசாலைகள் கொழும்பு மாவட்டத்தில் கூடிய காலங்கள்  லொக் டவுன் மூடி இருந்தது.  கொள்ளுப்பிட்டி -இருந்து மொரட்டுவை வரையிலான சிங்கள பாடசாலைகளுள்  இதுவே முதல் தடவை எனக்கு அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றமையாகும். எனது பாடசாலை 110 வருடங்கள் பழமை வாய்ந்த பெஸ்பேத்தேரியன் பாடசாலைக்கு பெயர்பெற்றுக் கொடுத்தனை பெருமையாகக் கொள்கின்றேன். எனது  பெற்றாா். அதிபா் ஆசிரியா்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என மாணவி கூறினாள்

 (அஷ்ரப் ஏ சமத்)

2 comments:

  1. இந்தபிள்ளையின் முயற்சிக்கும் அர்ப்பணி்ப்புக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete

Powered by Blogger.