May 01, 2021

கிழக்கு மாகாண தேர்தல் - த.தே.கூ. மு.கா. இணைந்து போட்டியா..?


தமிழ், முஸ்லிம் சக்திகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தெரிவித்தன.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவித்தார்.

தற்போது தேர்தல் நடத்தினால் தோற்றுவிடுவோம் என்ற அச்சம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்தார்.

தமிழ் பேசுகின்ற மக்கள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தமிழ் மக்கள் மாத்திரமல்லாது தமிழ் பேசுகின்ற முஸ்லிம் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது பாரிய நம்பிக்கை வைத்துள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

தமிழ் பேசுகின்ற மக்களாக நாங்கள் ஒன்றிணைந்து, கிழக்கு மாகாணமும் தமிழ் பேசுகின்ற மாகாணம் என்ற ரீதியில், அதன் அடையாளத்தை பேணும் வகையில், நாங்கள் ஆட்சியைக் கைப்பாற்றுவோம்

என அவர் நம்பிக்கை வௌியிட்டார்.

இது தொடர்பில் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் அதனை தமது கட்சி பரிசீலிப்பதாகவும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தை தமிழ் பேசும் மக்கள் கைப்பற்ற வேண்டிய தேவை இருப்பதனால், தமிழ் முஸ்லிம் சக்திகள் ஒன்று சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தையே இடம்பெற்றதாகவும் அதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இதனை சாதகமாக பரிசீலிப்பதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

3 கருத்துரைகள்:

இது மீண்டும் மீண்டும் முஸ்லிம்களை சிங்கள இன்னவாதிகளிடம் காட்டிக்கொடுக்கும் செயல். மாமனிதர் அஷ்ரப் முஸ்லிம்களின் தனித்துவத்திற்க்காக ஆரம்பித்த கட்சி இன்று முஸ்லிம்களை நிர்வாணமாக சுற்ற வைத்துள்ளது.

திரு க .ரவ எம்.பி.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அய்யா,
ஒரு சில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள்க, ஆசாத் சாலி மற்றும் சில மசூதி அறங்காவலர்கள் போன்ற ஒரு சில முஸ்லிம்கள் கட்டான்குடி மற்றும் பொட்டுவில் எதிர்ப்பு அணிவகுப்பில் இணைந்ததால், முஸ்லிம்கள் உங்களுடன் இணைந்ததைப் பற்றி கனவு காண வேண்டாம். கிழக்கு முஸ்லிம்கள் ஒருபோதும் தமிழர்களை நம்பவில்லை, நீங்கள் எங்களுக்கு செய்த குற்றங்களையும், 30 ஆண்டுகளாக எல்.ரீ.ரீ.ஈ யின் "டிஃபாக்டோ" ஆட்சியின் போது நீங்கள் எங்களை எவ்வாறு அடக்கினீர்கள் என்பதையும் நாங்கள் மறக்க மாட்டோம். வடக்கு மற்றும் கிழக்கை இணைப்பதை கிழக்கின் முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்த்தார்கள், கிழக்கில் உள்ள தமிழர்களுடன் எந்தவொரு அரசியல் ஒற்றுமையையும் முஸ்லிம்கள் தொடர்ந்து எதிர்ப்பார்கள், இன்ஷா அல்லாஹ். தற்போது ஒரு தேர்தல் நடந்தால் வடக்கு கிழக்கிலே அரசோடு இருக்கின்ற எவரும் தெரிவு செய்யப்படக் கூடிய நிலைமை இருக்காது என்றே நினைக்கின்றேன்.என்று நினைப்பது தவறு. நீங்கள் கூறிய இந்த அறிக்கைக்கான பதில், போனம்பலத்தின் 50-50 முன்மொழிவு குறித்து மறைந்த ஜெயா 1944 இல்
சட்டமன்றத்தில் கூறியதைப் போலவே இருக்கும். இலங்கையின் சுதந்திரத்திற்காக போராடுவதற்காக சிங்களவர்களுடன் சேருவதில் அவர் சொன்ன வார்த்தைகள் இவைதான்: “முஸ்லிம்களைப் பொருத்தவரை இது நடைமுறையாக இருந்து வருகிறது, உண்மையில், இது முஸ்லிம்களின் கடமையாகக் கருதப்படுகிறது, எங்கிருந்தாலும் அவர்கள் முதன்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று தங்களைக் கண்டறிந்தாலும் எந்தவொரு இயக்கத்திலும் நாட்டின் மக்களுக்கு முழு அளவிலான சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும். முழு சுதந்திரத்துக்கான போராட்டம் என்றால், முஸ்லிம் சமூகம் பொருத்தவரை எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் செயல்பட தயாராக இருக்கும், ஏனென்றால் சுதந்திரத்தின் எழுத்துப்பிழை எந்த வேறுபாடுகளையும் அழிக்க முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள் ”.
Noor Nizam - Convener "The Muslim Voice".

நல்ல நகர்வு.

Post a Comment