May 18, 2021

இலங்கை முஸ்லிம்களுடன் ரமழான் நோன்பை அனுஷ்­டித்த பெளத்­தர்களும், கிறிஸ்தவர்களும்

ரெஹான் ஜெய­விக்­ரம இலங்­கையின் பிர­தான எதிர்க்­கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் ஒரு இளம் 
அர­சி­யல்­வாதி. ஏப்ரல் 13 அன்று அவர் ஒரு அற்­பு­த­மான அறி­வித்­தலை வெளி­யிட்டார்.

“நான் ஒரு பெளத்தர். நான் என் வாழ்நாள் முழு­வதும் பெளத்த தத்­து வத்தை பின்­பற்­றவே முயற்­சிக்­கிறேன். ஆனால் இந்த ஆண்டு புனித ரமழான் மாதத்தில் எனது முஸ்லிம் சகோ­தர, சகோ­த­ரி­க­ளுடன் இணைந்து ரமழான் நோன்பை அனுஷ்­டிக்க நான் எதிர்­பார்த்­துள்ளேன். இது­போன்ற நல்ல அதிர்ஷ்­டத்தை நான் பெறு­வது இதுவே முதல் முறை.” என தனது டுவிட்டர் கணக்கில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

வெலி­கம நகர சபையின் தலை­வ­ராக உள்ள ரெஹான் ஜெய­விக்­ரம , ஏப்ரல் 14 ஆம் திகதி ரமழான் மாதத்தின் தொடக்­கத்தில் இருந்து, முஸ்­லிம்கள் பகலில் சாப்­பி­டு­வ­தையும் குடிப்­ப­தையும் தவிர்ப்­பதைப் போன்று தானும் அந் நேரத்தில் உண்­ப­தையும் குடிப்­ப­தையும் தவிர்த்து வரு­கிறார்.

இந்த ஆண்டு ஏப்ரல் 14 இல் இலங்­கையில் வாழும் மூன்று சமூ­கங்­க­ளுக்கு ஒரு சிறப்­புக்­கு­ரிய நாளாக அமைந்­தது. சிங்­கள மற்றும் தமிழ் புத்­தாண்டு மற்றும் முஸ்­லிம்­க­ளது நோன்பு மாத­மான ரமழான் மாதத்தின் தொடக்க நாள் இரண்டும் ஒன்­றாக அமைந்த ஓர் அரிய சந்­தர்ப்பம் இது­வாகும்.

ஆனால் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு, 2019 உயிர்த்த ஞாயிறு தினத்தில் இஸ்­லா­மிய தீவி­ர­வாத குழு­வி­னரால் கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் மற்றும் ஹோட்­டல்கள் மீது நடாத்­தப்­பட்ட குண்டுத் தாக்­கு­தல்­களால் பல இன மக்கள் வாழும் இலங்கை சமூகம் அதிர்ச்­சி­ய­டைந்­தது. இதில் கிட்­டத்­தட்ட 270 பேரின் உயிர்கள் காவு­கொள்­ளப்­பட்­டன.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்குப் பின்னர் பெரும்­பான்மை சமூ­கத்தில் பர­வி­யுள்ள முஸ்­லிம்-­ வி­ரோத மனப்­பான்­மையை அகற்றும் நோக்­கத்­துடன் தான் இந்த ஆண்டு முஸ்­லிம்­க­ளுடன் இணைந்து நோன்பு நோற்­ப­தாக பெளத்­த­ரான ரெஹான் ஜய­விக்­ரம கூறு­கிறார்.

இதற்­கி­டையில், ரெஹான் ஜய­விக்­ர­மவை விமர்­சிக்கும் சிலர் “முஸ்லிம் வாக்­கு­க­ளுக்குப் பின்னால் இவர் ஓடு­கிறார்’’ என்று குற்­றம் ­சாட்­டு­கின்­றனர்.

இதற்கு பதி­ல­ளித்த இளம் அர­சி­யல்­வா­தி­யான ரெஹான், தனது ஆத­ர­வா­ளர்கள் டுவிட்­டரில் வெளி­யிட்ட ஒரு கருத்தை நினைவு கூர்ந்தார்.

“வெறுப்பை விதைப்­பதை விட மத நல்­லி­ணக்­கத்தை வளர்ப்­பதன் மூலம் வாக்­கு­களை வெல்­வது நல்­லது.” என அவர் குறிப்­பிட்டார்.

அதே­போன்று கத்­தோ­லிக்க ஊட­க­வி­ய­லா­ள­ரான மேரி ஆன் டேவிட், 15 ஆண்­டு­க­ளுக்கும் மேலாக தான் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று வரு­வ­தாக கூறு­கிறார். அவர் “தன்னை மைய­மாகக் கொண்டு முக்­கி­ய­மான விட­யங்­களை தியா­னிப்­ப­தற்கு” ரமழான் மாதத்தை பயன்­ப­டுத்­து­வ­தாக அவர் கூறு­கிறார்.

” நோன்­பி­ருப்­பதன் மூலம் உணவைப் பற்றி தொடர்ந்து சிந்­திப்­பதைத் தவிர்க்க முடி­கி­றது. அடிக்­கடி சாப்­பி­டு­வதைத் தவிர்க்கச் செய்­கி­றது, அன்­றைய நாளை ஒழுக்­கத்­துடன் திட்­ட­மிட நோன்பு உத­வு­கி­றது” என்று மேரி ஆன் கூறினார்.

ரமழான் மாதம் தனது குறிக்­கோள்­களை வலுப்­ப­டுத்தி ஆரோக்­கி­ய­மான உணர்வை உரு­வாக்­கு­கி­றது என்றும் அவர் கூறு­கிறார்.

” ஆடம்­பர வாழ்க்கை வாழ்­ப­வர்­க­ளுக்கு பகலில் சாப்­பி­டாமல் இருப்­பது என்­பது ஒன்றும் பெரிய தியாகம் அல்ல. ஆனால் ஒரு நல்ல உணவைப் பெறு­வ­தற்கு வழி­யில்­லா­த­வர்­க­ளுக்கும் கடி­ன­மான இடங்­களில், வெளியில் வெயிலில் நின்று வேலை செய்­ப­வர்­க­ளுக்கும் இது மிகவும் கடி­ன­மா­னது.” என்றும் மேரி குறிப்­பி­டு­கிறார். நோன்பு மற்­ற­வர்­க­ளுக்கு தர்மம் செய்ய வேண்டும் என்ற உணர்வை நம்மில் ஏற்­ப­டுத்­து­கின்­றமை மிக முக்­கி­ய­மான விடயம் என்றும் அவர் வலி­யு­றுத்­து­கிறார்.

“உணவு மற்றும் பானத்­தி­லி­ருந்து விலகி இருக்­கும்­போது எங்­களால் முடிந்த அளவு தேவை­யு­டை­ய­வர்­க­ளுக்கு கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்­கிறேன். வறி­ய­வர்­க­ளுக்கு உணவு மற்றும் குடி­பானம் வழங்க வேண்டும். அவர்­களின் தேவை­களைப் பூர்த்தி செய்யும் நோக்கில் பிறரை நோன்பு நோற்­கு­மாறு நாம் ஊக்­கு­விக்க வேண்டும்.” என்றார்.

“இது ஒழுக்கம் அல்­லது தியா­கத்­திற்­கான நேரம் மட்­டு­மல்ல, அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளுடன் சேர்ந்து கொண்­டாட வேண்­டிய நேரம் இது” என்­கிறார் மேரி ஆன்.

“நோன்பு நேரத்தின் முடிவில் எங்­களை அழைக்கும் நண்பர் அல்­லது பிற குடும்­பத்­தி­னரின் வீட்­டிற்கு நாங்கள் செல்­லும்­போது, ​ஒரு இரவு விருந்தில் பங்­கேற்கும் உணர்வு கிடைக்­கி­றது. அங்கு மது­பானம் மாத்­தி­ரமே இருக்­காது” என மேரி ஆன் விளக்­கினார்.

இலங்­கையின் புகழ் பெற்ற முன்னாள் கிரிக்கட் வீர­ரான சனத் ஜய­சூ­ரிய தான் வரு­டாந்தம் ரமழான் மாதத்தின் 27 ஆம் நாளில் நோன்பு நோற்­ப­தாக கூறு­கிறார். ‘‘இன்று எனக்கு சிறப்­பா­ன­தொரு நாள். இது நான் ஒவ்­வொரு வரு­டமும் கடைப்­பி­டிக்கும் பாரம்­ப­ரியம். அத­னையே இன்றும் செய்­கிறேன். கஞ்சி மற்றும் பேரீத்தம் பழத்­துடன் நோன்பு துறந்தேன்’’ என சனத் ஜய­சூ­ரிய தான் நோன்பு துறக்கும் புகைப்­ப­டத்­துடன் டுவிட்­டரில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

‘‘நீங்கள் இன்று நோன்­பி­ருப்­ப­தாக கேள்­விப்­பட்டேன். 6.20 மணி வரை பொறு­மை­யாக இருப்­பீர்கள் என நினைக்­கிறேன்’’ என ஊட­க­வி­ய­லாளர் அசாம் அமீன் கொடுத்த பதி­வுக்கு பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே சனத் ஜய­சூ­ரிய மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்தார்.

அதே­போன்று சமூக ஊடக செயற்­பாட்­டா­ள­ரான பிரசாத் பெரே­ராவும் தான் ஒரு நாள் நோன்­பி­ருப்­ப­தாக அறி­வித்­தி­ருந்தார். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு டுவிட்­டரில் இவ்­வாறு பதி­விட்­டி­ருந்தார். ‘‘ நான் நாளை நோன்­பி­ருக்கப் போகிறேன். காலை முதல் மாலை வரை எனது நோன்பு தூய்­மை­யா­ன­தாக அமை­யவும் அதன் நோக்­கத்தில் குறி­யா­க­வி­ருக்­கவும் எனக்­காக பிரார்த்­தி­யுங்கள். எனது முஸ்லிம் நண்­பர்கள் இந்த மாதத்தில் நோன்பு நோற்­பதை பாராட்­டவும் உண­வின்றி சில மணித்­தி­யா­லங்கள் இருப்­பது எவ்­வ­ளவு கஷ்­ட­மா­னது என்­பதை எனக்கு நினை­வூட்­ட­வுமே வரு­டாந்தம் நான் இவ்­வாறு ஒரு நாள் நோன்பு நோற்­கிறேன்’’ என பிரசாத் பெரேரா குறிப்­பிட்­டுள்ளார்.

இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பல்­வேறு வெறுப்பு பிர­சா­ரங்கள் இன்றும் தொடர்­கின்ற போதிலும் இஸ்­லாத்­தையும் முஸ்­லிம்­க­ளையும் சரி­வர புரிந்து கொண்­ட­வர்கள் பெரும்­பான்மை சமூ­கங்­களில் இருக்­கி­றார்கள் என்­ப­தையும் அவர்கள் சக வாழ்வை விரும்­பு­கி­றார்கள் என்­ப­தை­யுமே நோன்பு நோற்கும் மேற்­படி சகோ­தர, சகோ­த­ரி­களின் கதைகள் கூறி நிற்­கின்­றன. அவர்­க­ளுக்­காக நாம் இந்த நன்­னாளில் பிரார்த்­திப்­ப­துடன் வெறுப்பு பிரசாரங்கள் இன்றும் தொடர்­கின்ற போதிலும் இஸ்­லாத்­தையும் முஸ்லிம்­க­ளையும் சரி­வர புரிந்து கொண்­ட­வர்கள் பெரும்­பான்மை சமூ­கங்­களில் இருக்­கி­றார்கள் என்­ப­தையும் அவர்கள் சக வாழ்வை விரும்­பு­கி­றார்கள் என்­­ப­­தை­யுமே நோன்பு நோற்­கும் மேற்­படி சகோ­த­ர, சகோ­த­ரி­களின் கதைகள் கூறி நிற்­கின்­றன. அவர்­க­­ளுக்­காக நாம் இந்த நன்­னாளில் பிரார்த்­திப்­ப­துடன் வாழ்த்­துக்­க­ளையும் கூறுவோம். (பி.பி.சி. சிங்­கள இணை­யத்­த­ளம் வெளி­யிட்ட கட்­டு­ரை­யையும் இங்கு பெயர் குறிப்­பிட்ட சில­ரது டுவிட்டர் பதி­வு­களையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டு எழு­தப்­பட்­ட­து)- Vidivelli

1 கருத்துரைகள்:

please don't use "Islamic" word to Terrorist.

Post a Comment