Header Ads



கொத்மலை நீர்த்தேக்கம் அருகே பாரிய குழி - வீதியும் மூடப்பட்டது


கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு அருகிலுள்ள வீதியில் இன்று  -26- திடீரென பாரியதொரு குழி ஒன்று ஏற்பட்டுள்ளது.

கொத்மலை நீர்த்தேக்கத்தின் நுழைவாயிலுக்கு அருகே சுமார் 06 அடி உயரத்தில் ஒரு பகுதி மூழ்கிவிட்டதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவி இயக்குநர் ரஞ்சித் அழகக்கோன் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையிலேயே மேற்படி அனர்த்தமும் இடம்பெற்றுள்ளது.

இதனால் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று காலை சம்பவ இடத்துக்குச் சென்ற பொறியியலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கான காரணத்தைக் கண்டறிவதற்கான ஆய்வுகளும் இடம்பெற்று வருகின்றன. TL

No comments

Powered by Blogger.