Header Ads



கருப்புபூஞ்சையை எதிர்கொள்வதற்கு இலங்கை, தயராக வேண்டும் - அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்


இந்தியாவிலிருந்து பரவக்கூடிய கருப்புபூஞ்சையை எதிர்கொள்வதற்கு இலங்கை தயராகவேண்டும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருப்பூஞ்சையை எதிர்கொள்வதற்கு அன்டிபயோட்டிக்ஸ்களை அரசாங்கம் சேமிக்கவேண்டும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரசாத்கொலம்பகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அம்பாறையில் கருப்பூஞ்சை பரவியுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தகவல் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அம்பாறைமாவட்டத்தின் பல மருத்துவ நிபுணர்களுடன் நான் இது குறித்து ஆராய்ந்தேன்  ஆனால் அவ்வாறான பாதிப்பு குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் துரதிஸ்டவசமாக இந்த நோய் பரவினால் அதனை எதிர்கொள்வதற்கு தயாராகயிருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் பரவுவதால் இலங்கையில் அது நுழைந்திருக்கலாம் என தெரிவித்துள்ள கொலம்பகே கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்ட கொவிட் நோயாளிகளும் ஏனைய நோயாளிகளும் 24 மணிநேரத்தில் உயிரிழப்பார்கள் அவர்களது நோய் எதிர்ப்புசக்தி இந்த நோயை எதிர்ப்பதற்கான வலிமையற்றதாக காணப்படுவதே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக முன்னரே மருந்துகள்  மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் தயாராகயிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

என்ற மருந்தினை கரும்பூஞ்சைக்கு எதிராக பயன்படுத்துகின்றனர் என தெரிவித்துள்ள கொலம்பகே ஆனால் இலங்கையில் இந்த மருந்து போதியளவு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். TL

No comments

Powered by Blogger.