Header Ads



இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை - பாதுகாப்பு அமைச்சு விசேட அறிக்கை


இலங்கை தொடர்பான பயண அறிக்கையில் அமெரிக்காவினால் எச்சரிக்கப்பட்டதன்படி இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறையினால் வழக்கமாக வழங்கப்படும் பொதுவான பயண எச்சரிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு 4 ஆம் நிலை பிரிவு பயண எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 அவசர நிலைமை காரணமாக இலங்கை தொடர்பாக இவ்வாறான அமெரிக்க பயண ஆலோசனை வழங்கப்படுகிறது என்ற போதிலும் இந்த எச்சரிக்கையில் பயங்கரவாத அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளது.

அத்துடன், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில் இலங்கை தொடர்பில் நிலை 03 முதல் நிலை 04 வரையிலான பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமை கருதி வழங்கப்படுவதாகவும் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகளின் பிரகாரம் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தற்போது எந்த அறிக்கையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துக் கொள்வதாக அதன் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. எதற்கும் அமெரிக்காவிடம் கவனமாக இருக்கனும். பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவதில் வல்லவர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.