Header Ads



இஸ்ரேலில் நடக்கும் யுத்தத்தை சரியா, தவறா என்பதை நான் கூற போவதில்லை - வீரவங்ச (வீடியோ)


 யுத்தத்தை செய்தது தானே என கூறுவதற்கு இஸ்ரேல் நாட்டில் இராணுவ தளபதிகள் இல்லை என அமைச்சர் விமல் வீரவங்ச கூறியமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பதிலளித்ததை அடுத்து நாடாளுமன்றத்தில் இன்று -20- சூடான வாக்குவாதம் ஏற்பட்டது.

துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் குறித்த விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவங்ச, இஸ்ரேலில் யுத்தம் நடப்பதாகவும் அது சரியா, தவறா என்பதை கூற போவதில்லை எனவும் அந்நாட்டில் ஜனாதிபதியும் எதிர்க்கட்சியும் ஒன்றாக இணைந்து நாட்டுக்காக வேலை செய்வதாகவும் எனினும் அந்த நாட்டில் நானே யுத்தம் செய்தேன் எனக் கூறும் இராணுவ தளபதிகள் இல்லை எனவும் கூறியுள்ளார்.

அமைச்சர் விமல் வீரவங்சவின் உரைக்கு பின்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சரத் பொன்சேகா, தனக்கு முன்னர் உரையாற்றிய அமைச்சர் கூக்குரல் இட்டதாகவும் அவர் இராணுவத்திடம் 89 ஆம் ஆண்டுகளில் வாங்கி சாப்பிட்டதன் சுவையை இன்னும் உணர்வதால், இராணுவத்திற்கு சேறுபூசுவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் விமல் வீரவங்ச, 89 ஆம் ஆண்டு அப்படியான சம்பவம் ஒன்று நடந்ததாக ஒப்புவித்தால், தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 



No comments

Powered by Blogger.