Header Ads



யாழ்ப்பாணத்து முஸ்லிம்களின் அன்பு - கீதா மோகனின் நெகிழ்ச்சியான பதிவு


சின்ன வயசுல யாழ்ப்பாணத்துல இருக்கும்போது எங்க வீட்டச் சுத்தி நெறைய முஸ்லிம்ஸ் வீடுங்கதான் ...

ரம்ஜான் வந்தா போதும் செம்ம வேட்ட தான் எங்களுக்கு... அந்த தெருலயே நாங்க மட்டும்தான் இந்து பேமிலி... So விரதம் முடிச்சுக்க பண்ணுற பலகாரம், நோன்புக் கஞ்சினு டெய்லி ஏதாச்சும் கெடைக்கும்... 

ரம்ஜான் பண்டிகைக்கு முதல்நாள் "தொதல்"னு ஒரு ஸ்வீட் பண்ணுவாங்க... ப்பா.... நம்ம திருநெல்வேலி அல்வா லாம் ரெண்டாம் பட்சம்தான்..... என்ன தொதல் இன்னும் வேர்ல்டு பேமஸ் ஆகல... மார்கெட்டிங் பத்தாது....

பெரிய வீட்டு வளவுல பெட்ரோமக்ஸ் லைட் வெளிச்சத்துல இரவிரவா ..... மூனு கல்லு வச்சு அடுப்பு மூட்டி.... பெரிய அண்டா வச்சு இந்தா தண்டி கம்பு வச்சு பாய்ங்க தொதல் கிண்டுற அழகே தனி.... அப்போ நா குட்டிப் பொண்ணு... ஓரமா நின்னு வேடிக்க பாத்துட்டே இருப்பேன்.....

வீட்டு ஆம்பளங்கதான் தொதல் பண்ணுவாங்க... பொம்பளங்க தேங்காய் துருவி தேங்காய்ப்பால் புழிஞ்சு குடுக்குறதோட சரி.... 

அவ்ளோ பெரிய சட்டில அரிசிமாவு தேங்காய்ப்பாலு சர்க்கரைனு போட்டு Gapபே இல்லாம விடாம கிண்டிட்டே இருக்கனும்.... கொஞ்சம் அசந்தா டேஸ்ட்டே போயிடும் ... அதுக்குலாம் ஆம்பள பசங்கதான் சரி.... 

தொதல் கிண்டி முடிச்சதும் வேற ஒரு பாத்திரத்துல ஊத்தி ஆற வைப்பாங்க.... இறுக்கமா வரும்.... மொத பங்கு வேடிக்க பாத்துட்டு இருந்த என்ன கூப்ட்டு தருவாங்க... ரொம்ப பெருமயா இருக்கும்.... ஓடிப் போயி அம்மாட்ட காட்டுவேன்.... அவங்க சின்ன துண்டு டேஸ்ட் பண்ணிட்டு மிச்சத்த எனக்கே தந்துடுவாங்க...

அப்பா சின்ன வயசுலயே தவறிட்டாங்க... அதனாலயோ என்னமோ தெர்ல... அந்த வீட்டு மாமி என்னோட ரொம்ப பாசம்... அவங்க வீட்டு பொண்ணுக்கு துணி வாங்கி சட்ட தைக்கும்போது எனக்கும் சேத்து தைப்பாங்க..... 

ரம்ஜான் பண்டிகைய அவங்க பேமிலி கூட சேர்ந்து நானும்தான் கொண்டாடுவேன்... 

சின்ன வயசுல நெறைய முஸ்லிம்ஸ் கூட பழகுனதாலதான் என்னவோ இப்பவும் FBலயும் சரி.... ரியல் லைப்லயும் சரி முஸ்லிம் Friends தான் அதிகம்..... 

அவங்க பண்டிகைக்கு பண்ணுற இன்னொரு ஸ்வீட் வட்டிலப்பம்.... செம்ம... முட்டைல பண்ணுவாங்க.... அந்த அனுபவம் பத்தி நாளைக்கு சொல்றேன் ...

(ரம்ஜானுக்கு சிலோன் பசங்க தொதல் கிண்டுற போட்டோஸ் FBல ஆங்காங்கே தென்படுது... பழைய நினைவுகளயும் சேர்த்தே கிண்டி விட்டாய்ங்க... 😁😁

கீழக்கரைல இன்னும் இந்த தொதல் கெடைக்குது... இருந்தாலும் சிலோன் தொதல அடிச்சிக்கவே முடியாது... 😍)

- கீதா மோகன் -

( பட உதவி: சேனையூர் சப்றீன் )

1 comment:

  1. Attn: Gheetha Mohan - நீங்க முஸ்லிம்களப்பத்தி பெரிசா பேசுறீங்க. அதுக்கு முஸ்லிம் என்ற வகையில் உங்களுக்கு ரொம்ப நன்றி சொல்லனும். ஒவ்வொரு உயிரிகளுக்கும் ஒவ்வொரு இயல்பு இருக்குங்க. மனிதன் மனித இயல்புடன் வாழந்தானாக இருந்தால் உயிரச்சம் காரணமாக நீங்கள் இந்தியாவில் வாழ வேண்டிய அவசியமே இல்லை. சாதி சனங்களுடன் நீங்கள் இங்கேயே பத்திரமாக மிகுந்த மகிழ்வுடன் வாழ்ந்திருக்கலாம். சாதி சனத்தினரைவிட பக்கத்து வீட்டார்களும் நண்பர்களும் உதவி செய்வதில் சளைத்தவரகள் அல்ல அம்மணீ.

    ReplyDelete

Powered by Blogger.