Header Ads



குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் அல்லது இறக்குமதியை இடைநிறுத்த இன்றைய அமைச்சரவையில் ஒப்புதல்


நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் அல்லது இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஸும் தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை மற்றும் நிதி நிலை தொடர்பில் கவனம் செலுத்தி வாகன இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அமைச்சரவையில் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதற்கமைய குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் அல்லது இறக்குமதி செய்வது தொடர்பில் இதற்கு முன்னதாக காணப்பட்ட திட்டத்தை அமைச்சரவை தீர்மானத்திற்கமைய தொடர்ந்து இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஊடக பிரிவு 

2 comments:

  1. இந்த கரு்த்தின் செயல்பாட்டின் உண்மையைத் தன்மையை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஆசைப்படுகின்றனர்.அதற்கு என்ன வழி.

    ReplyDelete
  2. The good way is Buying new cars for 225 MPs

    ReplyDelete

Powered by Blogger.