Header Ads



ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிரான, கண்டனப் பிரேரணை கிண்ணியா நகர சபையில் நிறைவேற்றம்


- A.H.HASFAR HASFAR -

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் கைதுக்கு எதிரான கண்டனப் பிரேரணை கிண்ணியா நகர சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்  பதியுதீன் அவர்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமையை கண்டித்து,  கிண்ணியா நகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் எம்.எம்.மஹ்தி அவர்களால்   பிரேரனை கொண்டுவரப்பட்டு, சபையில் அத் தீர்மானம் ஏகமானதாக  நிறைவேற்றப்பட்டது.

கிண்ணியா நகர  சபையின் மே மாதத்திற்கான மாதாந்த சபை அமர்வு, இன்று  (11) பகல் 12.30. மணிக்கு, தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 பிரேரணையை முன்வைத்த  உறுப்பினர் எம்.எம்.மஹ்தி உரையாற்றுகையில்,

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்  தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் அவர்களது  கைதானது, இந்த நாட்டு மக்ககளை மிகவும் வேதனைபடுத்தி இருப்பதோடு ஜனநாயக முறையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவும் காணப்படுகின்றது.

அதேபோன்று பல முஸ்லீம் தலைவர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டு இந்த நோன்பு காலத்திலும் சிறையில் அடைக்கப் பட்டுள்ளமையானது மிகவும் வேதனையானது.

இக் கைது நடவடிக்கைகளில் அநீதி இழைக்கப்பட்டுள்ளமையானது பெரும்பான்மை சமூகத்தினாலும் தற்போது உணரப்பட்டுள்ளமையை ஊடகங்களூடாக அறியக்கூடியாதாக இருக்கின்றது. 

இந் நாட்டில் ஜனநாயகம், சட்டவாட்சி, நீதித்துறையின் சுயாதீனம் நிலைநிறுத்தப் பட வேண்டும்.  அவர்கள் விடுதலை செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் இவ் விடயங்களில் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களும், கௌரவ பிரதமர் அவர்களும் கரிசனை காட்ட வேண்டும் எனவும்  கேட்டுக் கொண்டார்.

No comments

Powered by Blogger.