Header Ads



நகரபிதா பாயிஸ் ஜனாஸா, நல்லடக்கம் பற்றி வெளியாகியுள்ள தகவல்


மர்ஹூம் நகர பிதா KA Baiz அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் சம்மந்தமாக, மக்களின் உணர்வுகளை மதித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்ஷா அல்லாஹ் இறைவனின் நாட்டமும், அரசாங்கத்தின் அனுமதியும் கிடைக்கப்பெருமிடத்து அவை நடைமுறைப்படுத்தப்படும்.

1. ஜனாஸா இன்று பகல் 12 மணிக்கு பின்னர் கிடைக்கபெறுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. முதலில், ஜனாஸாவை அவரின் குடும்பத்தினர் மாத்திரம் பார்க்கும் வகையில் அவரின் வீட்டில் வைக்கப்படும். மக்கள் இந்த விடையத்தில் பிரச்சினைகளை உருவாக்காமல் முழுமையாக ஒத்துழைக்குமாறு வேண்டப்படுகின்றனர்.

3. மக்களின் பார்வைக்காக, ஜனாஸா எடுத்துச்செல்லப்பட்டு பொலிசுக்கு அருகாமையில் இருக்கும் உள்ளக விளையாட்டு அரங்கில் (Indoor Stadium) வைக்கப்பட்டு, உதைபந்தாட்ட மைதானத்தில் தொழுகை நடாத்தப்பட்டு வெட்டுகுளம் மையவாடிக்கு எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

குறிப்பு - வெட்டுக்குளம் பள்ளிவாசலில் தொழுகைக்காக அனுமதிக்கப்படுமிடத்து, ஜனாஸா தொழுகை பள்ளிவாசலிலேதான் இடம்பெறும்.

ஜனாஸாவை பார்வையிட வருபவர்கள் கட்டாயம் சுகாதார முறைகளை பேணி நடந்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

ஆண்கள் - பெரிய அன்றூஸ் பாடசாலையின் முன்புறமாக இருக்கும் நுழைவாயிலூடாகவும்.

பெண்கள் - சிறிய அன்றூஸ் பாடசாலையின் முன்புறமாக இருக்கும் நுழைவாயிலூடாகவும் செல்லுமாறு ஏட்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேர விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இத்தகவலை நகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்பத்தினர் சார்பாக, மக்கள் நிலைமைகளையும்,  சூழல்களையும் விளங்கிக்கொள்ளும் வகையில் பதிவிடப்படுகிறது.

MHM ரஸ்மி 

நகர சபை உறுப்பினர் 

புத்தளம்

No comments

Powered by Blogger.