Header Ads



மொரட்டுவை மேயரின் நடவடிக்கை - ஜனாதிபதி சீற்றம், மன்னிப்பு கோரினார் நாமல்


தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் மொரட்டுவை மேயர் நடந்துகொண்டமை குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கடும் சீற்றம் வெளியிட்டுள்ள அதேவேளை மேயரின் நடவடிக்கைளிற்காக அமைச்சர் நாமல்ராஜபக்ச மன்னிப்பு கோரியுள்ளார்.

மொரட்டுவ நடவடிக்கை அசிங்கமானது,மிகவும் வெற்றிகரமான தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் ஒரு கறை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிற்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான இடங்கள் விஞ்ஞானரீதியில் தெரிவுசெய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டு;ள்ளார்.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட சிறந்த பணிக்கு மொரட்டுவை சம்பவம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தனிப்பட்ட ஒரு சம்பவம் என்றாலும் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ச இது தனிப்பட்ட ஒரு சம்பவம் என தெரிவித்துடன் மன்னிப்பு கோரியுள்ளார்.

மொரட்டுவையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை குழப்பும் விதத்தில் நடந்துகொண்ட மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்ணான்டோ கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளின் போது மருத்துவருக்கு இடையூறுவிளைவித்த குற்றச்சாட்டின் கீழ் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மவுன்ட்லவேனியா பொலிஸில் சரணடைந்த இவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Thinakkural

No comments

Powered by Blogger.