Header Ads



முஸ்லிம்களின் எந்த விஷேட அம்சத்திற்கு அழைக்கப்பட்டாலும், தவறாது கலந்து கொண்ட ஷமித்த தேரர்


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று 30.05.2021 மரணமடைந்த முன்னாள் நாடாளுமன்ற மற்றும் தென்மாகாண சபை உறுப்பினர் பத்தேகம ஸமித ஹிமி அவர்கள் காலி மாவட்டத்தில் இன, மத பேதமின்றி சேவையாற்றிய ஒரு உன்னத பௌத்த பிக்கு ஆவார். 

இனவாதத்தின் சாயலும் இல்லாத ஸமித ஹீமி முஸ்லிம் சமூகத்தின் எந்தவொரு விஷேட அம்சத்திற்கு அழைக்கப்பட்டாலும் தவறாது கலந்து கொள்வார். 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இன்னொரு இனத்தை சாடையாகவும் சுட்டிக் காட்டி பேசமாட்டார். தனக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகள் பெரிதாகக் கிடைப்பதில்லை என்று அவர் நன்கு தெரிந்திருந்தாலும், அதனை சாடையாகவும் இதுவரை எங்கும் சுட்டிக்காட்டியதில்லை.  

அன்னாரின் மரணம் காலி மாவட்ட அனைத்து இன மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்.

அவருடைய ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன். 

කොරෝනා මාරයා සමග දින ගණනක් සටන් කරමින් හිද අද අප අතරින් සමුගත් හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රී හිටපු දකුණු පළාත් සභා මන්ත්‍රී ආචාර්ය පූජ්‍ය බද්දේගම සමිත නායක ස්වාමීන්වහන්ස ඔබ වහන්සේට උතුම් වූ අමාමාහ නිවන් සුවයම අත්වේවා!

He was a friend of all communities and he never discriminated others whether they were Muslims, Tamils or any other religions. He was a real friend of muslims and was most respected by them.

May the reverend attain Nibbana !

( Rasmy Galle )

1 comment:

  1. எனக்குத் தெரிய காலியில் ஒரு தனிப் பெரும்பான்மையினர் வாழும் பகுதியில் இயங்கி வந்த ஒரு சிறுவர் இல்லத்திற்கு இவர் சென்றிருந்த சமயம் அங்கு இரண்டு முஸ்லிம் சிறுவர்களும் இருப்பதை இவர் அறிந்து உடனடியாக முஸ்லிம் பகுதிக்கு விடயத்தை தெரியப்படுத்தியதுடன் சிறுவர்களுக்கு கத்னா செய்வதற்கு ஏற்பாடுகளை செய்ததுடன் குர்ஆன் ஓத கற்பிக்க ஒரு ஆலிமையும் ஏற்பாடு செய்தார்.

    ReplyDelete

Powered by Blogger.