Header Ads



இலங்கையில் முகங்களை மூடிய ஆடைகளுக்கான தடை, முஸ்லிம் பெண்களுக்கு எதிரான தாக்குதலாகும்


இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள முகங்களை மூடிய ஆடைகளுக்கான தடை நாட்டின் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிந்திய தாக்குதலாகும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கிறது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்ச்சி கங்குலி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த யோசணைக்கு இலங்கையின் அமைச்சரவை கடந்த ஏப்ரல் 27 ம் திகதி ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதலுக்கு இலங்கையின் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கினால் முஸ்லிம் பெண்கள் அணியும் நிக்காப் மற்றும் புர்கா போன்ற ஆடைகள் சட்டவிரோதமாக்கப்படும்.

அத்துடன் அவர்களுக்கான சமூக ஓரங்கட்டலை அது அதிகரிக்கும் எளவும் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து இந்த ஆடைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முயற்சியால் விலக்கிக்கொள்ளப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மீண்டும் அந்த நிலைமை ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் மீனாட்சி கங்குலி தெரிவித்திருக்கிரார். 

1 comment:

  1. முஸ்லிம்களே முஸ்லிம்களுக்குள் ஒரு சட்டத்தைப்போட்டு அதனை அமுல்படுத்துவதற்கும்; முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் மிகவும் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் அரசு அதன் ஒரு அங்கமான முஸ்லிம்களின் உரிமைகளைக் கபளீகரம் செய்யும் நோக்கில் நடைமுறைப்படுத்தத் துணியும் சட்டங்களுக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் உள்ளன. எந்த ஒரு இனத்தின் உரிமைகளைப் பாதிக்கும் விடயத்தில் சட்டங்கள் இயற்றுவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் நடைமுறைச் சட்டங்களுக்கும் இயற்கை நீதிக்கும் மாறானது என்பது ஒருபுறமிருக்க இவ்வாறான சட்டங்கள் ஒரே நாட்டில் வாழும் மக்களுக்கிடையே கருத்துரீதியான வேற்றுமைகளை ஏற்படுத்தும்.

    ReplyDelete

Powered by Blogger.