Header Ads



கொரோனா ஜனாசாக்களை அடக்க, களத்தில் குதிக்கிறது கிண்ணியா நகரசபை - பணிகளும் ஆரம்பம்


- ஹஸ்பர் ஏ ஹலீம் -

கொரோனாவினால் மரணிக்கும் ஜனாசாக்களை கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட  மகமாரு கிராமத்தில் நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதையிட்டு  முயற்சி செய்த அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதுடன் குறிப்பிட்ட ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கான கனரக இயந்திரத்தையும் (JCB) மற்றும் தேவையான ஊழியர்களையும்  நகர சபை பொறுப்பேற்றுக் கொள்வதற்கான அவசர கலந்துரையாடல் கிண்ணியா  நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். நளீம் அவர்களின் தலைமையில் பிரதி தவிசாளர் : ஐயூப் நளீம். சப்ரின் மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்று குறிப்பிட்ட இச்சேவையினை முழுமையாகப் பொறுப்பேற்பது தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.

 இச்செயற்பாடானது கிண்ணியா பிரதேச சபையுடன் இணைந்த செயற்பாடாக காணப்படும்.

மேலும் கொவிட்டினால் மரணிக்கும் ஜனாசாக்களை கையாள்வதற்கான சுகாதார பொருட்களான பாதுகாப்பு அங்கிகள் முகக்கவசம் சனிடைசர் போன்ற ஒரு தொகுதிப் பொருட்களை கிண்ணியா தளவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எம்.எம். ஜிப்ரி அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இனி கொவிட்19 ஜனாசாக்களை கிண்ணியாவில் அடக்கம் செய்யும் போது அதற்கான இயந்திர சேவை ஆளணி தொடர்பான சகல உதவிகளையும் கிண்ணியா நகர சபை பிரதேச சபை இணைந்து உடன் செயற்பட தயாராகவுள்ளதாகவும் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் மேலும் தெரிவித்தார்.

பல சிரமங்களுக்கு மத்தியில் ஜனாசாக்களை முன்னர் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.