Header Ads



இலங்கை பெண் சவூதியில் மரணம் - ஜனாஸாவை அங்கேயே நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள்


சவூதிக்கு பணிப்பெண்ணாக சென்ற மட்டக்களப்பு - கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த, கயாத்து முஹம்மது ஆயிஷா பீபி (வயது 46)  பெண், வெள்ளிக்கிழமை (14) மரணமடைந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் என்று சவூதியில் இருந்து வைத்திய அறிக்கை கிடைக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மரணமடைந்த குறித்த பெண்ணின் ஜனாஸாவை, சவூதி நாட்டில் நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக குடும்ப உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


No comments

Powered by Blogger.