Header Ads



மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் மு.பஷீர் காலமானார் - கல்லொழுவையில் ஜனாஸா நல்லடக்கம்


மூத்த எழுத்தாளரும், ஸ்ரீல.மு.கா. மூத்த போராளியும், மினுவாங்கொடை தொகுதி ஆரம்பகால அமைப்பாளருமான கலாபூஷணம் மு.பஷீர், (28) வெள்ளிக்கிழமையன்று, கல்லொழுவையில் காலமானார்.

சிங்களச் சூழல் நிறைந்த கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை பிரதேசத்தின் கல்லொழுவை எனும்  கிராமத்தில் 1940 இல் பிறந்த மு.பஷீர், தனது 82 ஆவது வயதில் இறையடி எய்தினார்.

   பஷீரின் படைப்புக்கள் பல, தேசிய ரீதியில் பரிசுகளைப் பெற்றிருக்கின்றன. பல விருதுகளையும் அவர் பெற்றிருக்கின்றார். "மீறல்கள்", 

"தலைமுறை இடைவெளி" என இரண்டு சிறு கதை நூல்களை அவர் வெளியிட்டுள்ளார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் "வாழும் கதைகள்" (சிறு கதைகள் மீள் அறிமுக) நிகழ்ச்சியை நான்கு ஆண்டுகளாக வழங்கி இருக்கின்றார். 

   1999 ஆம் ஆண்டில் அரசின் "கலாபூஷணம்" விருதைப் பெற்றுள்ளார். கொழும்பில் (2002)  இடம்பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சிறந்த படைப்பாளிகளுக்கான விருதையும், பொற்கிழியையும் பெற்றார். 

   "சிறுகதை, கவிதை, ஆய்வு" என, முத்திரை பதித்துள்ள இவர், ஐந்து பெண் பிள்ளைகளுக்கும், ஒரு ஆண் மகனுக்கும் தந்தையாவார்.

    கல்லொழுவை ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில், (28) மாலை நான்கு மணிக்கு, அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. 

  ஸ்ரீல.மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ்  போராளிகள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் ஜனாஸா இறுதி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். 

(ஐ. ஏ. காதிர் கான்)

No comments

Powered by Blogger.