Header Ads



பெரியமுல்லையில் ஜும்ஆ மஸ்ஜித் வீதியில் அமைக்கப்படும், தொலைதொடர்பு கோபுர வேலை பொலிஸாரினால் இடைநிறுத்தம்


- Ismathul Rahuman -

நீர்கொழும்பு, பெரியமுல்லை, ஜும்ஆ மஸ்ஜித் வீதியில் அமைக்கப்படும் டயலொக் நிறுவனத்தின் தொலைதொடர்பு கோபுரத்தின் வேலைகள் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லரின் உத்தரவுக்கினங்க இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் அதற்கு அனுமதி வழங்கு வததில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக இரவோடுஇரவாக அமைக்கப்பட்ட உயரமான தொலை தோடர்பு கோபுரத்திற்கு பிரதேச மக்கள் எதிர்பு தெரிவித்ததுடன் நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். நீர்கொழும்பு பிரதி மேயர் பரீஸும் இதற்கு மாநகர சபையின் அனுமதி பெறப்படவில்லையெனக் கூறி தனது எதிர்பை வெளிப்படுத்தினார்.

மக்களின் எதிர்ப்பையும் பொறுப்படுத்தாது, அதன் வேலைகளை டயலொக் நிறுவனத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போது மீண்டும் பொலிஸாரிடம் முறையிடவே பொலிஸார் ஸ்தலத்திற்கு வந்து வேலைகளை நிறுத்துமாறு உத்தரவிட்டார்கள்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு டயலொக் நிறுவன அதிகாரி ஒருவரை அழைத்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தொலைதொடர்பு கோபுரம் நிறுவுவதற்கு சுமார் 17 நிறுவனங்களிலிருந்து அனுமதி பெறவேண்டும். அதற்காக இவர்கள் விண்ணப்பித்திருந்தாலும் அனுமதி கிடைத்ததற்கான ஆவணங்கள் சமர்பிக்கப்படவில்லை என்றே தெரியவருகின்றது.

கொரோனா அச்சுறுத்தலினால் காரியாலங்களின் செயல்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதனால் அனுமதியை பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது என அறியவந்துள்ளது.

உரிய அனுமதி கிடைக்கும் வரை கோபுர நிர்மான வேலைகளை நிறுத்துமாறு பொலிஸார் அவர்களுக்கு கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளனர்.

நீர்கொழும்பு பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லரின் ஆலோசணைக்கினங்க சிறுகுற்ற முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி ரோகன டி சில்வா தலைமையில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டனர்.

No comments

Powered by Blogger.