May 23, 2021

நடந்த முடிந்த போர், பல விளைவுகளை சந்தித்த போதிலும் ஜெருசலத்தை மீட்பதே முக்கிய நோக்கம் - இஸ்மாயில் ஹனியா


இஸ்லாமிய போராட்ட  இயக்கமான  "ஹமாஸ்" இன் அரசியல் பிரிவு  தலைவர் இஸ்மாயில் ஹனியா  அளித்த பேட்டியில் "  ஜெருசலத்தின் வாளான அல்குத்ஸை மீட்கும்  போரில் இஸ்லாமிய போராட்ட இயக்கத்தின் வெற்றி என்பது  மூலோபாய வெற்றி (Strategical Victory)  என்பதை ஹனியா உறுதிப்படுத்தினார்.  ஏனெனில் ஜெருசலத்தின் வாளை மீட்கும்  போருக்குப் பிந்தைய நிலை என்பது  அதற்கு முன்பு இருந்ததைப் போல அல்ல.  இந்த யுத்தம் சூழல்களை மாற்றியமைத்து , புதிய வெற்றிகளுக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளது.  இது பல வெற்றிகளையும்  ஏராளமான முன்னேற்றங்களையும்,  ஒவ்வொரு மட்டத்திலும் நிறைய மூலோபாயத்தை உருவாக்குவதிலும் பயனளித்துள்ளது.

ஜெருசலத்தின் வாளை மீட்கும் போரில் ஃபலஸ்தீனிய மக்களின் இடைவிடாத எதிர்ப்பு போராட்டத்தின்  வெற்றியைக் கொண்டாடும் உரையில், "ஆக்கிரமிப்புடனான போராட்டத்தின் மையமாக" ஜெருசலேம் இருப்பதாக ஹனியா வலியுறுத்தினார்.

* கூட்டு வெற்றி *

வீரம் மிக்க சமரசமில்லாத எதிர்ப்பால் பதிவுசெய்யப்பட்ட இந்த மகத்தான வெற்றியை  நமது பாலஸ்தீனிய மக்களுக்கும் நமது அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கும் சமர்ப்பிப்பதாக ஹனியா கூறினார்.   இறை அருளால் கிடைத்த மூலோபாய வெற்றி(Strategical Victory)  சியோனிச எதிரியுடனான மோதலில் நம்மை ஒன்றினைத்திருக்கிறது.

இந்த வெற்றி நமது ஃபலஸ்தீன மக்களால் பெறப்பட்டது  என்றும், இந்த  தேசத்தின் மகன்கள்  அதற்காக வீதியில் இறங்கியும் , சழன்றும் வந்தார்கள் என்றும், நம் மக்களின் இடைவிடாத எதிர்ப்பின் விளைவால்  இறைவனின்  கிருபையுடனும், நம் மக்கள் மீது இறைவன் காட்டிய கருணையுடனும், நம்மீது இந்த வெற்றி  இறங்கியதாக  அவர் சுட்டிக் காட்டினார்.

ஜெருசலத்தையும் ஆசீர்வதிக்கப்பட்ட அல்-அக்ஸா மஸ்ஜிதை  பாதுகாக்கவும்,   ஷேக் ஜர்ராஹ் , டமாஸ்கஸ் வாயில் மற்றும் நமது புனிதங்கள் மீது படிந்துள்ள பாவம் நிறைந்த கரங்களை அகற்றுவதற்கும் காஸா எப்படி எழுச்சியோடு செயல்பட்டது என்பதை ஹனியா விளக்கினார்.

இந்த ஆசீர்வதிக்கப்பட்ட போரில் சிந்தப்பட்ட  தியாகிகளின் இரத்தத்திலிருந்தும், எதிர்ப்பு போராட்ட தலைவர்களிடமிருந்தும், நம் மக்களுக்கு எதிராக சியோனிச எதிரி செய்த படுகொலைகளுக்கு பகரமாக  இந்த வெற்றி கிடைத்துள்ளது  என்பதை ஹனியா சுட்டிக்காட்டினார்.

அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள், அல்-குத்ஸ் படைப்பிரிவுகள், அபு அலி முஸ்தபா படைப்பிரிவுகள், நாசர் படைப்பிரிவுகள் மற்றும்  இதைப் போன்றே  உள்ள பிற எதிர்ப்புக் குழுக்கள் தலைமையிலான தீவிர  எதிர் தாக்குதல்களால் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இஸ்லாமிய எதிர்ப்பு படைகள் ஒன்றிணைந்து நின்று நிகழ்த்திய கூட்டு முயற்சியின்

 விளைவு மற்றும் கடுமையான வலிமிகுந்த தாக்குதல்களால் எதிரிகளை தாக்கி விதம் ஆகிவற்றினால்  இந்த நிலம் , அதன் சமூகம், அதன் பாதுகாப்பு மற்றும் இராணுவ நிறுவனங்கள் மற்றும்  எதிர்காலத்தில் நம் கைவசமாகக்ககூடிய இந்த புனித  நிலத்திலிருந்து  அவர்களை விரட்டப்பட்டதை  ஹனியா சுட்டிக்காட்டினார்ர.

பெருமை வாய்ந்த காசாவில் எதிர்ப்பு போராட்டத்தையும் அதன் வழிநடத்திய  தலைமைக்கும் ஹனியா மரியாதை செலுத்தினார். அதில் முன்னணியில் நின்ற அன்பான சகோதரர் யஹ்யா சின்வார், துறை ரீதியாகவும்  களத்திலும்  தலைவர்களையும் சகோதரர்களையும் வழிநடத்திய  மகத்தான மனிதர் ஆவார்.

ஜெருசல மக்கள் ஆரவாரத்தோடு ஒரு பெயரை உச்சரித்து கூச்சலிட்ட கொரில்லா தாக்குதல் நிகழ்த்தும் படை வீரர் முகமது அல்-ஜைஃப் மற்றும் அல்-அக்ஸா மஸ்ஜிதுக்கு  அருகிலும், முழு ஃபலஸ்தீனத்திலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நிகழ்த்திய  அணிவகுப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களில் எதிர்ப்பு போராட்டத்திற்கான உதவியை   சர்வ வல்லமையுள்ள அல்லலாஹ்விடம் வேண்டினர் அவர்களுக்கும் ஹனியா தனது மரியாதையை தெரிவித்தார்.

எதிர்ப்பு போராட்டத்தின் தலைவரின் பெயரைக்  கோடிக்கணக்கானோர் முழக்கம் எழுப்பினர், அவர் யார் என  தெரியாது, அவரை இதுவரை மக்கள்  சந்திக்கவில்லை, அவரது முகத்தைக் கூட அறியவில்லை, ஆனால் இரு உலகங்களிலும் இறைவன் தனது நினைவகத்தில் அவரை  உயர்த்தியதால் அவருடைய பெயரை மக்கள் முழக்கமிட்டுள்ளனர்.

"இன்று நாம் இந்த எதிர்ப்பு போராட்டத்திற்கும்,  துணிச்சலான அதன் தலைமைக்கும் முன்னால் பெருமையுடனும் கண்ணியத்துடனும் நிற்கிறோம், அவர்களில் சிலர் மரணித்து விட்டனர் , அதில் தலைவரான  பாசெம் இசா மற்றும் டாக்டர் ஜமால் அல்-ஜெப்தே" ஆகிய இருவர் என்று ஹனியா  கூறினார்.

-இஸ்மாயில் ஹனியா அரசியல் பிரிவு தலைவர் - ஹமாஸ் 21-மே-2021

:அஹ்மது யஹ்யா அய்யாஷ்

1 கருத்துரைகள்:

Post a Comment