Header Ads



சிரேஷ்ட வீரர்களை இணைத்தால், அவர்களை நீக்கி இளம் வீரர்களை இணைக்குமாறும், இளம் வீரர்களை இணைத்தால், ஏன் சிரேஷ்ட வீரர்களை இணைக்கவில்லை என வினவுகின்றனர்

கிரிக்கெட் நிபுணர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி, இலங்கையில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்காக, நீண்டகால திட்டம் தயாரிக்கப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட வீரர்களை இணைத்தால், அவர்களை நீக்கி இளம் வீரர்களை இணைக்குமாறும், இளம் வீரர்களை இணைத்தால், ஏன் சிரேஷ்ட வீரர்களை இணைக்கவில்லை என வினவுகின்றனர்.

இந்த நிலைமை இரு பக்கத்திலும் உள்ளது.

எனவே, அதற்கு ஒரு நியாயமான காலத்தை வழங்க வேண்டும்.

இதற்கமைய, கட்டமைப்பு ரீதியான மாற்றத்துடன், எதிர்காலத்தில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேநேரம், திறமையான, புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தில், முழுமையான பயனைப் பெறுவதற்கு வீரர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

கிரிக்கட் அபிவிருத்திக்கான திட்டம் வகுக்க, அரவிந்த டி சில்வா, முத்தையா முரளிதரன், ரொஷான் மஹாநாம மற்றும் குமார் சங்கக்கார முதலான விளையாட்டுத்துறையில் நிபுணத்துவமிக்கவர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்காலத்தில் வெற்றிக்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க அவர்களுக்கு இயலுமாக இருக்கும்.

அவர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தாங்கள் கட்டுப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.