Header Ads




சவுதி அரேபியாவின் பள்ளி பாடத்திட்டத்தில் இந்துயிசம்,ராமாயணம்,மகாபாரதம் உள்ளிட்டவைகள் சேர்க்கப்பட்டு அவைகள் அந்நாட்டு மாணவர்களுக்கு போதிக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்நாட்டின் முக்கிய அரசு பிரமுகர்கள் செய்திகளை முறையாக சரிபார்க்காமல் வெளியிட்ட இந்திய ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளனர்.

கடந்த வாரம் இந்தியாவின் ஆங்கிலம் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி ஊடகங்களும் சவுதி அரேபியாவில் மாணவர்களுக்கு இந்திய புராணங்களான ராமாயணம், மகாபாரதம் பயிற்றுவிக்கப்படும்,’ என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் . ‘தொலைநோக்கு பார்வை -2030’ என்ற திட்டத்தின் கீழ் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தனது நாட்டு பாடத்திட்டத்தில் இவைகளை சேர்த்துள்ளதாகவும் இதன் மூலம் மாணவர்களின் கலாசார அறிவை விரிவுப்படுத்த அவர் விரும்புவதாகவும் மேலும் இந்திய கலாசாரங்களான யோகா,இந்துயிசம் ஆயுர்வேதம் குறித்தும் இளவரசர் கவனம் செலுத்தி வருவதாகவும் பெருமை பொங்க செய்தி வெளியிட்டன.

இதற்கு ஆதாரமாக சவுதியை சேர்ந்த யோகா ஆசிரியர் பத்மஸ்ரீ  நவுப்-அல்-மார்வாய் என்பவரது ட்விட்டர் பதிவு ஒன்றை ஊடகங்கள் பகிர்ந்தன.அந்த பதிவில் அவர் தனது மகனின் சமூகவியல் பாட தேர்விற்கு தான் உதவியதாகவும்,இந்த பாடத்திட்டம் சவுதியின் விஷன்-2௦3௦ திட்டத்தின் படி அமைந்துள்ளதாக கூறியுள்ளவர் ராமாயணம் மற்றும் மகாபாரத இதிகாசங்கள் உள்ள பாடப்புத்தகத்தின் படத்தினை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்ததுடன் ஹிந்துயிசம் மற்றும் கர்மா பற்றி தெரிந்து கொள்ள இந்த புதிய பாடத்திட்டம் உதவும் எனக் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த செய்தியை இந்துத்துவ வலதுசாரிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கினர்.அதில் தீவிர இஸ்லாமிய போக்கு கொண்ட சவுதி அரசின் பாடத்திட்டத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை சேர்த்தது மோடியின் வெளியுறவு நடவடிக்கையால் விளைந்தது எனவும்,சவுதியை அசைத்து பார்த்த மோடி எனவும் பல கோணங்களில் பதிவுகளை எழுதினர் .இதனை பாஜகவின் முக்கிய தலைவர்களும் பெருமை பொங்க தங்கள் வலைதள பக்கங்களில் இதனை பகிர்ந்தனர். இதைத் தொடர்ந்து இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் இதனை செய்தியாக வெளியிட்டு பெருமைபட்டுக் கொண்டன.இதனால் இந்த செய்தி இந்தியாவை தாண்டி அனைத்து நாடுகளிலும் பரவியது.

இந்நிலையில் இந்துத்துவ வலதுசாரிகளின் மகிழ்ச்சியில் இடியை இறக்குவது போல் சவுதி அரசின் முக்கிய பிரமுகர்கள் சவுதி பாடத்திட்டம் தொடர்பாக இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்தி போலியானது என்று அதனைக் கண்டித்து கடுமையாக சாடி ட்விட் செய்து உள்ளனர்.

சவுதி அரசின் முக்கிய பத்திரிக்கையாளரும்,அரச குடும்பத்திற்கு வேண்டப்பட்டவருமான இப்ராஹீம் அல் சுலைமான் தன்னுடைய ட்விட்டர் பதிவில், சவுதி அரசின் ஒப்புதல் பெற்று அங்குள்ள தனியார் பள்ளிகள் கிரேக்க காவியங்கள் மற்றும் இந்து புராணங்கள் தொடர்பாக பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளதாகவும் இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது எனவும் சவுதி சாராத பிற நாட்டு மக்களுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் சவுதி அரசின் தேசிய பாடத்திட்டத்தில் அப்படி எதுவும் இல்லை அது தனித்துவமானது அதில் எதையும் கலக்க முடியாது என விளக்கம் அளித்துள்ளார்.மேலும் இந்திய ஊடகங்கள் இப்படியான செய்தியை வெளியிடுவதற்கு முன் சவுதி அரசின் கல்வி துறையை தொடர்பு கொண்டு சர்பார்க்க மாட்டார்களா?என கேள்வி எழுப்பியுள்ளார்.

استاذة نوف اتفق معك فيما يخص حرية التعليم للجاليات في مدارسهم العالمية الخاصة والمقتصرة على أبناء جاليتهم أو من هم على ملتهم وهذا الأمر ليس بجديد فهو معمول به ضمن أطر محددة ومناهج خاصة بهم منذ تأسيسها وهو مالا يمكن خلطه مع المناهج السعودية الخاصة بالتعليم الأهلي والعام المحلي .. https://t.co/HPt7q6fcyu

— إبراهيم السليمان🇸🇦 (@70sul) April 25, 2021

சவுதியின் பிரபல அரசியல் ஆய்வாளர் உமர் அல்-காம்டி, இந்திய ஊடகங்கள் மேற்கோள் காட்டிய அல் மர்வாயின் ட்விட்டர் பதிவை விமர்சித்து , “உங்கள் மகன் உங்கள் குடும்ப உறவுகள் காரணமாக சவுதியில் உள்ள ஒரு சர்வதேச இந்திய பள்ளியில் படித்து வருகிறார் . இந்த பள்ளிகள் விசன் 2030 க்கு முன்னர் பல ஆண்டுகளாக அதே பாடத்திட்டத்தைப் பயன்படுத்துகின்றன. எனவே இப்படி போலியான பாடத்திட்டத்தை அரசின் அதிகாரபூர்வமான பாடத்திட்டத்துடன் இணைப்பது மிகப்பெரிய பொய் என கடுமையாக சாடியுள்ளார்.மேலும் சவுதியின் கல்வித்திட்டம் தொடர்பாக மோசமான எண்ணத்தை மற்றவர்களுக்கு ஏற்படும் வகையில் அவர் பதிவு உள்ளதாகவும் கடிந்துள்ளார்.

هذه التغريدة لاقت صدى واسع في اوساط الاعلام و المجتمع الهندي بكافة طوائفة و نقلت صورة خاطئة عن التعليم في #السعودية 

الاعلام الهندي نشر مقالات بهذا الخصوص بدون الرجوع لوزارتي التعليم و الاعلام السعوديتين @media_ksa @malkassabi https://t.co/m0JZnsYXTThttps://t.co/2tvymu8l3g

— عمر الغامدي Omar Al Ghamdi (@OGx66) April 25, 2021

சவுதி நாட்டின் முக்கிய பெண் தொழில் அதிபர் நஜ்வா அல்துவைஜ்ரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கடுமையாக இந்திய ஊடகங்களை விமர்சித்துள்ளார்.அதில் “நாங்கள் அனைத்து மதங்களை மதிக்கிறோம், ஆனால் நீங்கள் , சவுதி பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடத்திட்டம் என போலியாக ஒன்றை பதிவுசெய்து பொய் சொல்லியுள்ளீர்கள். அந்த பாடத்திட்டம் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய சமூகத்திற்கான தனியார் பள்ளிகளுக்கான பாடத்திட்டம்.இந்திய ஊடகங்கள் பொய்யை விஷன் 2௦3௦ உடன் இணைப்பதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை என சாடியுள்ளார்.

كلنا نحترم الأديان لكن أنت كذبتي وقلتي أن هذا منهج بالمدارس السعودية يُدرس بينما هو منهج لمدارس خاصة للجالية الهندية في السعودية ! ولا أعلم ماالهدف من ربط الرؤية بكذبتك !

— NAJWA ALTUWAIJRI (@heavendeargod) April 25, 2021

இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் பாரபட்சம் இல்லாமல் வெளியிட்டுள்ள இந்த போலி செய்தியை சவுதி அரசின் குடும்ப பிரமுகர்களும்,அந்நாட்டின் பத்திரிக்கையாளர்களும் கண்டித்து தொடர்ச்சியாக ட்விட் செய்து வரும் நிலையில் இந்தியாவின் எந்த ஊடகமும் போலி செய்தியை பரப்பியதற்கு இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை.மேலும் இந்த செய்திக்கு இந்திய ஊடகங்கள் மேற்கோள் காட்டிய அல்மர்வாயின் ட்விட்டர் பதிவை அவர் பொது பார்வையிலிருந்து அகற்றியுள்ளார்.இதனால் சவுதி மக்கள் இடையே இந்திய ஊடகங்கள் கேலிக்கு உரியதாக மாறியுள்ளது.

2 comments:

  1. நாயின் மலத்தை விட கேவலமானவர்கள் இந்த RSS இந்து தீவிரவாதிகள், மேலும் அதையும் விட கேவலமானவர்கள் பிச்சைகார இந்திய ஊடகங்கள்.

    ReplyDelete
  2. Unknown அன்று சொன்னது

    ReplyDelete

Powered by Blogger.