Header Ads



இஸ்ரேல் - காசா மோதலை லண்டனுக்கு கொண்டுவரக்கூடாது, யூத விரோத இனவெறியில் ஈடுபடுவதை ஏற்க முடியாது


பிரித்தானியா தலைநகரில் யூத சமூகத்தைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையிலான சண்டை யூத எதிர்ப்பு அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தின் மத்தியில் சாதிக் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் காசாவில் ஏற்படும் சம்பவங்களை கண்டும் மிகவும் கோபமடைவதும், மரணங்களால் மனம் உடைவதும் மற்றும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதும் நியாயமான ஒன்று தான்.

ஆனால், இஸ்ரேல் மற்றும் காசா மோதலை சாக்காகப் பயன்படுத்தி யூத விரோத மற்றும் இனவெறியில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

பிரித்தானியாவில் உள்ள யூத சமூகத்தினரிடையே யூத விரோத சம்பவங்கள் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல்-காசா மோதலை லண்டனுக்கு கொண்டுவரக்கூடாது என்பது மிகவும் முக்கியமானது என நகர மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.   

1 comment:

  1. இனவெறி ஆறு ஊற்று எடுத்தது உங்க இங்கிலாந்து வல்லரசு ஆகிய போதே

    ReplyDelete

Powered by Blogger.