Header Ads



இஸ்ரேல் - காசா சண்டை நிறுத்தத்திற்கு தீவிர முயற்சி, மோதலும் தொடருகிறது


இஸ்ரேல்-காசா பகுதியில் தொடரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர சண்டை நிறுத்தம் செய்யுமாறு இரு தரப்புக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்த நிலையில், அங்கு மீண்டும் ராக்கெட் தாக்குதல்கள் தீவிரமாகியிருக்கின்றன.

இந்த விவகாரத்தில் இரண்டாவது வாரமாக இஸ்ரேலிய படையினருக்கும் காசா பாலத்தீன போராளிகளுக்கும் இடையே கடுமையாக மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்தார். ஆனாலும், தங்களுடைய மோதல் போக்கை கைவிட தயாராக இல்லாதவர்கள் போல இஸ்ரேலிய படையினரும் பாலத்தீன போராளிகளும் தாக்குதல்களை தொடர்ந்து வருகிறார்கள்.

இதற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும் உடனடியாக இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இரு தரப்பு மோதல்களால் அமைதியாக வாழும் மக்கள்தொகையில் சிறார்கள் உட்பட பலரும் இறப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பிலும் காணப்படும் வன்முறை செயல்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறிய புதின், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி தீர்வு அடிப்படையிலான செயல்பாட்டை முன்னெடுக்க கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.அந்தத் தீர்வு சர்வதேச சமூகம் ஒப்புக் கொண்ட கோட்பாடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்றும் புதின் குறிப்பிட்டார். BBC



1 comment:

  1. இஷ்ரேல அழித்து முடித்த பிறகு தான் அநியாயம் அழியும்

    ReplyDelete

Powered by Blogger.